மேலும் அறிய

பிரதமர் மோடி தொடக்கிவைத்த "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" இயக்கம்: 80 கோடி மரக்கன்றுகள் நட்டு லண்டன் ரெக்கார்டில் இடம்பெற்று சாதனை

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம் லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம்:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' என்கிற இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இது சுற்றுச்சூழல் பொறுப்பை, தாய்மார்களுக்கு அர்ப்பணிக்க்கும் வகையில் ஒரு தனித்துவ முயற்சியாக இந்த இயக்கம்  2024, ஜூன் 5  அன்று தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றினை நட்டதன் மூலம் பிரதமரால் தொடங்கப்பட்டது.2024, செப்டம்பருக்குள் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின்  கீழ் 80 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கான லட்சிய இலக்கை சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் வெற்றிகரமாக எட்டியது. இந்த இலக்கு 2024,  செப்டம்பர் 25 அன்று, காலக்கெடுவுக்கு 5 நாட்கள் முன்னதாகவே  எட்டப்பட்டது. அரசு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளால் இந்த சாதனை சாத்தியமானது.

1 மணி நேரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள்

2024,  செப்டம்பர்  22 அன்று, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள பிராந்திய ராணுவத்தின் 128 காலாட்படை பிரிவுகளும் சுற்றுச்சூழல் பணிக்குழுவும்  ஜெய்சால்மரில் ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியது. இந்த மகத்தான சாதனை, லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது . 

அவற்றில் சில புதிய உலக சாதனைகள்:

* ஒரு மணி நேரத்தில் ஒரு குழுவால் பெரும் எண்ணிக்கையில் நடப்பட்ட  மரக்கன்றுகள்.
* ஒரு மணி நேரத்தில் பெண்கள் குழுவால் பெரும் எண்ணிக்கையில் நடப்பட்ட  மரக்கன்றுகள்.
* ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மரக்கன்றுகளை நட்டது

பிரதமர் மோடி தொடக்கிவைத்த

அமைச்சகங்கள்:

பிரதமர் மோடியின் அழைப்புக்கு இணங்க, சுதந்திர தினமான 2024, ஆகஸ்ட் 15 அன்று 15 லட்சம் மரக்கன்றுகளை  நடுவதற்கான நாடு தழுவிய முயற்சியை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.  தகவல், ஒளிபரப்பு அமைச்சகமும் மரக்கன்றுகள்  நடும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் சுமார் 7,000 மரக்கன்றுகளை இத்துறை நட்டுள்ளது.

இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான திறன் மேம்பாடு,  தொழில்முனைவோர் அமைச்சகம், அதன் நிறுவனங்கள் முழுவதும் பரவலான மரக்கன்றுகள்  நடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்களில்  11,778 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத் தொடர்ந்து குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் தலைமையிலான  தூய்மையே சேவை  2024 இயக்கம், தூய்மை மற்றும் பசுமைப் பரப்பு விரிவாக்கத்தை வலியுறுத்தியது.

இந்த இயக்கத்தின் வெற்றி அதன் எளிமையிலும்  உணர்ச்சிபூர்வமான முறையீட்டிலும் உள்ளது. தங்கள் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு மரத்தை நடவு செய்ய நாடு முழுவதும் உள்ள மக்களை ஊக்குவிக்கிறது. இவ்வாறு செய்யும்போது, அவர்கள் இயற்கை, தாய்மை ஆகிய இரண்டின் வளர்ப்பு சக்தியை மதிக்கிறார்கள்.  ஆரோக்கியமான மற்றும் நிலையான உலகத்தை எதிர்கால சந்ததியினர் மரபுரிமையாக பெறுவதை உறுதி செய்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget