Minor Rape Case : எதிர்கால வேலைகள் இருக்கு.. என்னை விட்டுடுங்க.. வன்கொடுமை வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்! என்ன நடந்தது?
மைனர் பெண் தனது எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், தான் மேலும் படிக்க விரும்புவதாகவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் மனு அளித்திருந்தார்
மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட புனேவைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு எதிரான எஃப்ஐஆர் ரத்து செய்யப்படுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, மும்பை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 20 வயது இளைஞரும், பாதிக்கப்பட்ட பெண்ணும், ஒரே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அப்பொழுது, அந்த மாணவன் சிறுமியை தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து யாரிடமும் எதுவும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தனது தாத்தாவிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பெற்றோர்கள் அருகில் இருந்த காவல்நிலையத்தில் தனது பெண்ணிற்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாணவன் நீது 376 (வன்கொடுமை), 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மைனர் பெண் தனது எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், தான் மேலும் படிக்க விரும்புவதாகவும், வழக்கு விசாரணை இடையூறாக இருப்பதால், பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு அளித்திருந்தார். இந்த வழக்கானது கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், நேற்று நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி ஸ்ரீராம் எம் மோடக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், அந்த இளைஞர் மீது உள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்