Viral Video: நான் வெய்ட் பண்ணனுமா? டாக்டரை தாக்கிய முதல்வரின் மகள்! வைரலான வீடியோவால் மன்னிப்பு கேட்ட சி எம்!
மருத்துவரை தாக்கிய முதலமைச்சரின் மகளின் வீடியோ வைரலானதை தொடர்ந்து முதலமைச்சர் மன்னிப்பு கோரினார்
மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சரான சோரம்தங்கா, தனது மகள் மருத்துவரைத் தாக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
மருத்துவர் மீது தாக்குதல்:
மிசோரம் மாநில தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள ஒரு க்ளினிக்கில், தோல் மருத்துவரை சந்திக்க முதலமைச்சர் சோரம் தங்காவின் மகள் சென்றுள்ளார். அப்போது, முன் அனுமதி பெறாமல் மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது முன் அனுமதி பெற்று வருமாறு மருத்துவர் கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மகள், மருத்துவரை தாக்கியுள்ளார்.
கடும் எதிர்ப்பு
கடந்த புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் பலரும் முதலமைச்சர் மற்றும் அவரது மகள் மீது கடுமையாக விமர்சனம் வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் மிசோரம் பிரிவு, போராட்டத்தையும் தொடங்கியது. மேலும் நேற்று மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மன்னிப்பு கோரிய முதலமைச்சர்;
இந்நிலையில் முதலமைச்சர் சோரம்தங்கா கைப்பட மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மருத்துவரிடம் தனது மகள் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram