New Parliament Constructions: புதிய நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் வண்ணம்..! பொருட்கள் எது எது எங்கிருந்து வந்தது தெரியுமா?
புதிய நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே பிரதிபலிக்கும் வண்ணம், கட்டுமான பணிக்கான பொருட்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே பிரதிபலிக்கும் வண்ணம், கட்டுமான பணிக்கான பொருட்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடம்:
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதில், ஒஏ நேரத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை அறையில் 300 உறுப்பினர்களும் அமரலாம் என்பன உள்ளிட்ட வசதிகள் குறித்து, ஏற்கனவே நாம் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவின் வண்ணத்தையும் பறைசாற்றும் விதமாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பான விவரங்களை இங்கு அறியலாம்.
எந்த மாநிலங்களில் இருந்து எந்த பொருட்கள் வாங்கப்பட்டன:
- சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கல் ராஜஸ்தானின் சர்மதுராவில் இருந்து வாங்கப்பட்டது. தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் ஹுமாயூனின் கல்லறைக்கான மணற்கல்களும் சர்மதுராவிலிருந்து தான் பெறப்பட்டது.
- புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட தேக்கு மரங்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து பெறப்பட்டது.
- கேஷரியா பச்சைக் கல் உதய்பூரில் இருந்தும், சிவப்பு கிரானைட் அஜ்மீருக்கு அருகிலுள்ள லகாவிலிருந்தும், வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் உள்ள அம்பாஜியிலிருந்தும் பெறப்பட்டன.
- கட்டடத்திற்கு தேவையான மரச்சாமான்கள் மும்பையில் உருவாக்கப்பட்டன.
- மக்களவை மற்றும் மாநிலங்களவை அறைகளில் உள்ள மேற்கூரைகளுக்கான எஃகு அமைப்பு யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூவிலிருந்து பெறப்பட்டது.
- இக்கட்டடத்தை ஒட்டிய கல் 'ஜாலி' (லேட்டிஸ்) வேலைகள் ராஜஸ்தானின் ராஜ்நகர் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் இருந்து பெறப்பட்டது.
- அசோகர் சின்னத்திற்கான பொருட்கள் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து பெறப்பட்டது.
- மக்களவை மற்றும் மாநிலங்களவை அறைகளின் பிரமாண்டமான சுவர்கள் மற்றும் பாராளுமன்ற கட்டடத்தின் வெளிப்புறங்களில் உள்ள அசோக் சக்ரா மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து வாங்கப்பட்டது.
- கல் செதுக்கும் வேலை அபு ரோடு மற்றும் உதய்பூரைச் சேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டது. மேலும் ராஜஸ்தானின் கோட்புடாலியில் இருந்து கல் திரட்டுகள் பெறப்பட்டன.
- புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுமான நடவடிக்கைகளுக்கு கான்கிரீட் கலவையை உருவாக்க ஹரியானாவில் உள்ள சர்க்கி தாத்ரியில் இருந்து தயாரிக்கப்பட்ட மணல் அல்லது எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டது.
- கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் சாம்பல் செங்கற்கள் ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்தும், பித்தளை வேலைகள் மற்றும் முன் வார்ப்பு அகழிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்தும் பெறப்பட்டன.