Karnataka Hijab Row Verdict: “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமல்ல; தடை செல்லும்” - கர்நாடக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தும் கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Karnataka High Court dismisses various petitions challenging a ban on Hijab in education institutions pic.twitter.com/RK4bIEg6xX
— ANI (@ANI) March 15, 2022
இந்த தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில்,”நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும், மாநிலமும் நாடும் முன்னேற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் அடிப்படை வேலை படிப்பதுதான். எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
I welcome the Court's decision. I appeal to everyone that the state & country has to go forward, everyone has to maintain peace by accepting the order of HC. The basic work of students is to study. So leaving all this aside they should study and be united: Union Min Pralhad Joshi https://t.co/xb3BeAYBQm pic.twitter.com/PBzQHqzX9A
— ANI (@ANI) March 15, 2022
தீர்ப்பின் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்த, கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்