Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
singer Kalpana: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்பனா தமிழில் ஏராளமான ப்ளாக்பஸ்டர் பாடல்களை பாடியுள்ளார்.

Singer Kalpana: தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இது சம்பவம் பெரும் அதிர்ச்சியை திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. பின்னணி பாடகியாக மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளின் ஒளிபரப்பாகும் பிரபல பாட்டு நிகழ்ச்சிகளின் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
முதல் பாடல்:
தமிழில் இவர் 1991ம் ஆண்டு முதன்முதலாக என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவர் குரலில் தமிழில் வெளியான பிரபலமான பாடல்களின் பட்டியலை கீழே காணலாம்.
திருப்பாச்சி அரிவாள ( தாஜ்மகால்)
பெண்ணே நீயும் ( பிரியமான தோழி)
தத்தை தத்தை ( மன்மதன் - தெலுங்கு)
இஸ்தான்புல் ராஜகுமாரி ( மழை)
கடவுள் தந்த ( மாயாவி)
நெஞ்சம் எனும் ஊரிலே ( ஆறு)
நீ வரும்போது ( மழை)
காத்தாடி போல ஏன்டி ( மாயாவி)
மதுர ஜில்லா மச்சான்தான்டி ( திருவிளையாடல்)
போகிறேன் ( 36 வயதினிலே)
கொடி பறக்குற காலம் ( மாமனிதன்)
இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்தரரின் மகள் ஆவார். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்பனா தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தெலுங்கில் இந்திந்தா அன்னமய்யா படத்தில் இடம்பெற்ற நவமூர்த்திலைநட்டி பாடலுக்காக நந்தி விருது பெற்றவர். தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வாங்கியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து கொள்ளவில்லை என்றும், அவருக்கு இன்சோம்னியா இருப்பதால் அதற்காக அவர் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் அளவு அதிகரித்ததன் காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாக அவரது மகள் விளக்கம் அளித்துள்ளார்.

