மேலும் அறிய

Headlines Today, 30 Aug: விபத்தில் 6 பேர் பலி...கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்...கொடூர தாய் கைது...இன்னும் பல...!

Headlines Today in Tamil 30 August: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Headlines Today in Tamil 30 August: 

* கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கிய கொடூர தாயை ஆந்திராவுக்கு தேடிச் சென்று கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

* கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதியதில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

* செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

* டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், டி47உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமாரும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

* சிவகங்கை அருகே குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராம மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

* கடந்த நான்கு நாட்களுக்கு பின் கேரளாவில் கொரோனா பாதிப்பு 30,000க்கும் கீழ் குறைந்துள்ளது. 

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் குண்டி வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் குண்டிவெடித்தது.

* சென்னையில் வாடகைக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் குடியிருப்பவர்களின் விவரங்களை வரும் அக்டோபர் 26-ந் தேதிக்குள் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

* மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைக் கொன்றுவிடுவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்ததாக கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

* மடத்திற்குள் நுழைந்தாலே நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்று மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி.

* மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர, அவர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

* சென்னையில் 5 சிறுமிகளிடம் அத்துமீறிய நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

* தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரேநாளில் 189 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்தனர்.

* சென்னையில் தொடர்ந்து 6ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
Embed widget