மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Headlines Today : டெல்லியில் முதல்வர்கள் மாநாடு..! இலங்கைக்கு புதிய பிரதமர்..! தலைப்புச் செய்திகள் சில!
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெறும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி பங்கேற்பு
- இலங்கைக்கு பொருட்களை அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உதவ அனுமதிக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
- இலங்கை மக்களுக்கு ரூபாய் 50 லட்சம் சொந்த நிதியுதவி – ஓ.பன்னீர்செல்வம்
- தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் உயராது – போக்குவரத்துத்துறை அமைச்சர்
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்
- திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயரிழப்பு விவகாரம் – வழக்கை வாபஸ் பெற காவல்துறை பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு
- திருவண்ணாமலை கைதி உயிரிழப்பு வழக்கின் விசாரணையில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் – சட்டசபையில் முதல்வர் உறுதி
- கல்லூரிகளில் காலையில் பெண்களுக்கும், மாலையில் ஆண்களுக்கும் வகுப்புகள் நடத்த அரசு பரிசீலனை – அமைச்சர் பொன்முடி
- தஞ்சையில் 22 வயது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது
இந்தியா :
- பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் கூட்டுக்கூட்டம்
- இலங்கைக்கு 760 டன் மருந்து பொருட்கள் வழங்கி இந்தியா உதவி
- டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் வெப்ப அலை 3 நாட்கள் வீச வாய்ப்பு
- நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை – மின் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு
- நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை விரைவாக இயக்குவதற்கு ஏதுவாக 657 பயணிகள் ரத்து
- பஞ்சாபில் காலிஸ்தான் போராட்டம் – இரு தரப்பினர் கடும் மோதல் – பட்டியாலாவில் ஊரடங்கு பிறப்பிப்பு
- மாற்று எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
உலகம் :
- இலங்கையில் அனைத்துக்கட்சிகள் அடங்கிய புதிய அரசை அமைக்க கோத்தபய ஒப்புதல்
- இலங்கையின் பிரதமர் பதவியில் மகிந்த ராஜபக்சே நீடிக்க மாட்டார் – முன்னாள் பிரதமர் சிறிசேனா பேட்டி
- உலகின் மிக உயரமான இயேசு சிலை பிரேசில் நாட்டில் உருவாக்கம்
விளையாட்டு :
- ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ
- ஐ.பி.எல். போட்டியில் ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது லக்னோ
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து
- ஐ.பி.எல். போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மதியம் 3.30 மணிக்கு மோதல்
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion