(Source: ECI/ABP News/ABP Majha)
Headlines Today, 05 Oct: இயங்கத் தொடங்கிய வாட்ஸ் அப், பேஸ்புக் சேவை, அஜித் வீட்டு முன் பெண் தற்கொலை முயற்சி..இன்னும் பல..!
Headlines Today, 05 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
Headlines Today in Tamil, 05 Oct:
* பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் முடங்கியது. கடந்த சில மணி நேரங்களாக சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர், 7 மணி நேரத்திற்கு பிறகு இவை அனைத்தும் இயங்கத் தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
* நடிகர் அஜித்தின் வீட்டிற்கு முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
* உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
* சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசு அதிகரித்து ரூ.100.23க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசு அதிகரித்து ரூ.95.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழ்நாட்டில் நேற்று 1467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக 16 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பால் நேற்று 16 பேர் உயிரிழந்தனர். அதில் தனியார் மருத்துவமனையில் 6 பேர் , அரசு மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது.
* வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு செய்து, சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகப் பண்டோராஸ் பேப்பர் (Pandora's Papers) மூலமாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பட்டியலில், அனில் அம்பானி, நீரவ் மோடியின் தங்கை, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
* கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும் அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டும் எனக் கோரியும் மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
* தமிழ்நாட்டில், வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தலில் வாக்கு சேகரிப்புக்கான பரப்புரை ஓய்ந்தது.
* நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினக்குடியில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலியின் கால்தடத்தை சத்தியமங்கலம் முதுமலை காப்பக டைகர் என்னும் மோப்ப நாய் கண்டுபிடித்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை மசினகுடி - சிங்காரா வனப் பகுதியில் மரங்களில் ஏறி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.