Guwahati-Bikaner Express Derailed:கெளஹாத்தி - பிகானேர் ரயில் தடம் புரண்டு விபத்து.. 3 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்...
12 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் இரயில் இன்று மாலை 5 மணி அளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டொமோஹனி என்ற பகுதியை கடக்கும்போது கவுஹாத்தி - பிகேனர் எக்ஸ்ப்ரஸ் இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. 3 பேர் உயிரிழப்பு என்னும் தகவல் கிடைத்துள்ளது.
12 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் இரயில் இன்று மாலை 5 மணி அளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. அதனை அடுத்து, இரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும், கடுமையாக காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.
Spoke to Railways Minister Shri @AshwiniVaishnaw and took stock of the situation in the wake of the train accident in West Bengal. My thoughts are with the bereaved families. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) January 13, 2022
விபத்து நடந்தபோது, கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜியிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்