Metro Rail: இனி மெட்ரோ ரயிலிலும் ரோந்து செல்லப்போகும் போலீஸ்..! என்ன காரணம் தெரியுமா..?
மெட்ரோ ரயிலில் சிலர் அத்து மீறும் வீடியோக்கள் வெளியான நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் போலீசார் ரோந்து செல்ல உள்ளனர்.
மெட்ரோ ரயிலில் சிலர் அத்து மீறும் வீடியோக்கள் வெளியான நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் போலீசார் ரோந்து செல்ல உள்ளனர்.
தொடர் அத்துமீறல்:
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு இளம் ஜோடி அத்தூமீறி நடந்து கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சியில் இளைஞரின் மடி மீது பெண் படித்திருந்ததும், அவர்கள் முத்தமிட்டு கொண்டதும் பதிவாகி இருந்தது. பொது வெளியில் இது போன்று அத்துமீறல் செயலில் ஈடுபட்ட அந்த ஜோடியின் செயல் சக பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருந்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ கடும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், மெட்ரோ நிர்வாகம் டெல்லி காவல் துறைக்கு எழுதி உள்ள கடிதத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளுக்குள் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. சீருடை அணிந்த போலீசார் மற்றும் சாதாரன உடை அணிந்த போலீசாரின் பாதுகாப்பை மெட்ரோ ரயில் நிலையங்களில் பலப்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில் ஒருசில மெட்ரோ ரயில்களை தவிர மற்ற அனைத்து மெட்ரோ ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பயணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க முடியும் என்றும், பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் சிரமங்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
முன்னதாக இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என கூறி உள்ளது.
சமீப காலங்களாக குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில்களில் சிலர் ஆபாசமாக மற்றும் அத்துமீறி நடந்து கொள்வது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின்றது. டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் ஆபாசமாக உடை அணிந்து சென்றதாக வெளியான புகைப்படங்களும், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை தடுக்க டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க,
Crime: காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சித்த சகோதரி..! காப்பாற்றாமல் விடியோ எடுத்த சகோதரர்..!