Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் சிறில் என்பவரது வீட்டில் காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே நுழைந்து மர்ம நபர் அவரது மனைவி ரோனிகாவை கத்தியால் மிரட்டி மிளகாய் பொடியை தூவி 9 பவுன் தாலி செயின் பறித்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் அருகே உள்ள சாலையில் பள்ளி பேருந்து நேற்று காலை வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து புகை கிளம்பியதால், டிரைவர் வாகனத்தை உடடியாக நிறுத்தி குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்றார்.வாகனத்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டார் டிரைவர்.
- கேரள மாநிலத்தில் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இன்று காலை 8.15 மணி அளவில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில நொடிகள் பலத்த அதிர்வு ஒலி உணரப்பட்டது. பீதியடைந்த பலர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.மூன்று வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.3Sec முதல் 4 Sec வரை இருந்தாக கூறுகின்றனர்.
- 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - கனடா இடையிலான ஆட்டத்தில் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் தொடங்கும் முன்பே ரத்து செய்யப்பட்டது. அதாவது போட்டியில் ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்தது ஐசிசி. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லையில் பரபரப்பு!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் தற்போது காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Breaking News LIVE: சிவராஜ் சிங் சவுகானுக்கு சிறப்பான வரவேற்பு
மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக போபால் வந்தடைந்த மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
#WATCH | Union Minister and former Madhya Pradesh CM Shivraj Singh Chouhan received a grand welcome as he arrived in Bhopal for the first time after taking oath as Union Minister pic.twitter.com/jCpQxNowkh
— ANI (@ANI) June 16, 2024
Breaking News LIVE: உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்
ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தான் மற்றும் ரியாசி இடையே புதிதாக கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்-செனாப் ரயில் பாலத்தை ரயில்வே அதிகாரிகள் விரிவான ஆய்வு செய்தனர். இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கும்.
#WATCH | J&K: Railway officials conducted an extensive inspection of the newly constructed world's highest railway bridge-Chenab Rail Bridge, built between Sangaldan in Ramban district and Reasi. Rail services on the line will start soon. pic.twitter.com/48ETYT1GpB
— ANI (@ANI) June 16, 2024
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அகிலேஷ் யாதவ்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு; ஒரே கோரிக்கை எனவும் வலியுறுத்தியுள்ளார்.