Breaking Live | கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Breaking News in Tamil Live: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
LIVE
Background
Breaking News in Tamil Live:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலைகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது.
ஜன.20-க்கு பின் உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி
கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(20.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாவட்ட நிர்வாகம்
ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: - நடிகர் கார்த்தி ட்வீட்
அரசுக்கும் அன்பும் நன்றியும் - நடிகர் கார்த்தி
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் - நடிகர் கார்த்தி