மேலும் அறிய

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க மாநிலத் தலைவர்களை மாற்றி அதிரடி காட்டிய ஜெ.பி நட்டா! டெல்லி பறந்த அண்ணாமலை!

ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், மாநில பா.ஜ.க தலைவர்களை மாற்றம் செய்து புதிய தலைவர்களை நியமித்துள்ளார் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

மாநில பா.ஜ.க தலைவர்களை மாற்றம் செய்து புதிய தலைவர்களை நியமித்துள்ளார் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. அதன்படி ராஜஸ்தான், ஒடிசா, பிகார், டெல்லி ஆகிய மாநிலங்களின் பா.ஜ.க தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவின் டெல்லி செயல் தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவாவை டெல்லி மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில தலைவராக சி.பி. ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் ராஜஸ்தானில் சதீஸ் பூனியா மாநிலத்தலைவராக இருந்தார்.  ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மொஹந்திக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் மன்மோகன் சமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில பாஜக தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக, சாம்ராட் சவுத்ரி நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அதேபோல் பீகாரில்  முதலமைச்சர் நிதீஷ் குமார், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி, ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பீஜூ பட்நாயக் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் ஒடிசாவில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பா.ஜ.க இந்த முறை அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென அனைத்து நடவடிக்கைளும் அக்கட்சி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நேற்றைய தினம் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். அவர் டெல்லி பயணத்தில் பா.ஜ.க உயர்மட்ட தலைவர்களை சந்தித்தாக கூறப்படுகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியான பா.ஜ.க இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பா.ஜ.க ஐ.டி விங் பிரிவிலிருந்து பலரும் விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி தொடர்ந்தால் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதாக வெளியான தகவல், கூட்டணிக்கு இடையே விரிசல் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடும் அதிருப்தியில் தலைமை இருப்பதாக தெரியவந்துள்ளது. இது சம்மதமாக பேச்சுவார்த்தை நடத்த அவர் டெல்லி சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூட்டணி தொடர விருப்பமில்லை என தெரிவிக்கும் நிலையில, மத்திய பா.ஜ.க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் கூட்டணி தொடர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
Embed widget