மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: தமிழ்நாட்டில் களமிறங்கும் ராகுல் காந்தி.. கெஜ்ரிவாலிடம் மேலும் 4 நாள் விசாரிக்க அனுமதி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
- உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
- நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
- திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை - திருமாவளவன்
- தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சவரனுக்கு ரூ.50 ஆயிரம் விற்பனை ஆகி வருகிறது.
- தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை; முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு - நாளை இறுதி பட்டியல் வெளியீடு
- ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்; வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி மரணம் - வைகோ நேரில் அஞ்சலி
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
- பிரதமர் மோடி பற்றி மட்டுமல்ல, ஆளுநர் பற்றி கூட எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை பேசுவது இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு
- மோடியை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ராகுல் காந்தி பிரச்சாரம் - 4 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடு
- விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி; மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
- கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை மேலும் 4 நாள் விசாரிக்க அனுமதி - நீதிமன்றத்தில் காரசார விவாதம்
- கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
- உத்திர பிரதேசத்தில் கேங்க்ஸ்டர் ஆக இருந்து பின்பு அரசியல்வாதியாக மாறிய, முக்தார் அன்சாரி மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹைதராபாத் தொகுதியில் ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சாவை காங்கிரஸ் களம் இறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- லிங்க்ட்- இன் தளத்தில் விரைவில் குறுகிய வடிவ வீடியோ ஆப்ஷன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போட் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா.
- ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு.
- எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா - சீனா இடையேயான ஆலோசனை நிறைவு
விளையாட்டு:
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
- ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்ததில் இருந்து மார்கஸ் ஸ்டோனிஸ் விடுவிப்பு.
- ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
- ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion