மேலும் அறிய

HBDTNCM : தேசிய அரசியலை குறிவைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - ரெடியாகும் திட்டம்

கலைஞர் இருந்த வரை, ஸ்டாலினை ஒரு நல்ல நிர்வாகி ஆனால் நல்ல தலைவரா என்று தெரியாது என்ற விமர்சனம் அவர்மீது இருந்தது.

இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாடுதான் ஒன்று. ஆனால் அதில், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. அனைத்துக்கும் வெவ்வேறு பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவை இருக்கின்றன.  அதனால் தான் இந்தியாவை துணைக்கண்டம் என்கிறார்கள். மாநிலங்களின் தன்மைக்கேற்றவாறு தான் அதன் அரசியலும் இருக்கின்றன. எல்லாம் வெவ்வேறாக இருந்தாலும் மத்திய அரசு என்ற ஒற்றைக் குடையின் கீழ் இயங்க வேண்டிய சூழ்நிலையில் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான ஆட்சிமுறையை செயல்படுத்த முடியாதல்லவா. அதனால் தான் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுயாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்கிறது இந்திய அரசியலமைப்பு.

இந்தியாவில் தேசியக்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் ஆட்சியை தங்களுக்குப் பொருந்தாவிட்டாலும், ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சுயாட்சியின் அவசியம் புரியாமல் மத்திய அரசின் போக்கிற்கே தங்களை மாற்றிக்கொள்கின்றன. ஆனால், இவைகளில் விதிவிலக்காக இருக்கிறது ஒரு மாநிலம். மற்ற மாநிலங்களுக்கு சுயாட்சிப் பாடம் எடுக்கும் மாநிலம். மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பேசும் மாநிலம். இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் மாநிலமான தமிழ்நாடு தான் அது. மாநில சுயாட்சிக்காகவே அண்ணா காலம் முதல் ஸ்டாலின் காலம் வரை மத்திய அரசுடன் சண்டையிட்டிருக்கிறது திமுக.

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை அமைக்க வேண்டுமென அடிக்கடி டெல்லிக்குக் காவடிதூக்கும் போது கேட்கவேண்டியதுதானே என்ற கேள்வி எழுந்தபோது, காவடி தூக்கும் நிலமை தமிழகத்துக்கு மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்கும் இருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் மாநில சுயாட்சி கேட்கிறோம் என்றார் கலைஞர். மாநில சுயாட்சி கேட்பது என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமான குரல் அல்ல. இந்தியா முழுமைக்குமான குரல். மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பேசியதால் தான் கலைஞர் தேசிய அளவிற்கான தலைவராக உயர்ந்தார். பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு வந்த போது கூட என் உயரம் எனக்குத் தெரியும் என்று ஒதுங்கிக்கொண்டார்.

HBDTNCM : தேசிய அரசியலை குறிவைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - ரெடியாகும் திட்டம்

அதேபோன்றதொரு சூழல் மீண்டும் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. அண்ணா காலத்தில் தொடங்கிய சுயாட்சி முழக்கம் ஸ்டாலின் காலம் வரை தொடர்கிறது. ஜிஎஸ்டி நிலுவையை கேட்பது முதல்- கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது வரை மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்தே தான் குரல் கொடுக்கிறது தமிழ்நாடு. தன் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து சிந்திக்கும், போராடும் அண்ணாவின், கலைஞரின் வழித்தடத்தை தொடர்வதால் ஸ்டாலினும் தேசிய அளவிற்கான தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். மாநில சுயாட்சிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் எழும் முதல் குரல் ஸ்டாலினுடையதாகதான் இருக்கிறது. 

சமூக நீதி தான் திராவிட இயக்கத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் இருந்தும் வழுவாமல் செல்கிறார் ஸ்டாலின். சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை-முழுப்பயனைக்கூட அல்ல- சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும் என்றார் அண்ணா. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததன் பின்னாண திமுகவின் நீண்ட சட்டப்போராட்டம் தான் இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது.

நீட் தேர்வு வேண்டாம். அது சமூக நீதிக்கு எதிரானது என்பதை ஆரம்பம் முதலே கூறிவரும் திமுக, தற்போது வரை அதில் விடாப்பிடியாக இருக்கிறது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, மாநில சுயாட்சி பாடம் எடுத்திருக்கிறார். 

HBDTNCM : தேசிய அரசியலை குறிவைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - ரெடியாகும் திட்டம்

வாழப்பிறந்த மனிதன் சுதந்திரத்தோடு உலவ வேண்டுமானால் அவன் வாழும் சமூகத்தில் நீதி வேண்டும். அந்நீதி நிலைத்திருக்க வழி வேண்டும். சமூகத்தில் அநீதி மலிந்து கொடுமை மிகுந்துவிட்டால் அதில் மனிதன் சுதந்திரத்தைத் தேடினால் கிடைக்குமா? சுதந்திரத்தை நாடினால் முடியுமா? என்றார் அண்ணா. எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூகநீதி. அனைவருக்கும் சமமான பொருளதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்பதுதான் சமூகநீதி.

அனைவருக்குமான சமவாய்ப்புகள் என்பதன் மூலம் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை அடைய முடியும் என்று கூறிய ஸ்டாலின்,  நாடு முழுவதும் சமூகநிதிக் கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் `அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கி இந்தியா முழுவதும் உள்ள 37 அரசியல் தலைவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

நாட்டையே ஆளும் மத்திய அரசின் தலையீட்டை தடுப்பது தான் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவால். மாநில அரசுக்கு மத்திய அரசால் இடையூறு ஏற்படும்போதெல்லாம் அதை துணிவுடன் எதிர்த்திருக்கிறது திமுக. ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் எதற்கு என்று அண்ணா காலத்து திமுக ஆரம்பித்து வைத்தது முதல் கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா என்று ஆளுநரை எச்சரிப்பது வரை மாநிலத்தில் ஆளுநருக்கான இடம் எது என்பதை ஸ்டாலின் காலத்து திமுகவும் சுட்டிக்காட்டியே வருகிறது. 

HBDTNCM : தேசிய அரசியலை குறிவைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - ரெடியாகும் திட்டம்

அதே போல மத்திய அரசின் எதேட்சதிகார போக்கிற்கு எதிராக எழும் முதல் குரலும் தெற்கிலிருந்து தான் ஒலிக்கிறது. இந்திராகாந்தி எமெர்ஜென்ஸியை கொண்டுவந்தபோது அதை எதிர்த்து ஆட்சியை இழந்த வரலாறு திமுகவினுடையது. அந்த துணிவை பார்த்து வியந்தவர்தான் இந்திராகாந்தி. அதே துணிவோடு தான் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் முதல் சிஏஏ வரை அனைத்தையும் எதிர்க்கிறார் ஸ்டாலின். காஷ்மீர் மீதான அடக்குமுறையை எதிர்ப்பது முதல், ஹதராஸில் நடக்கும் சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது வரை திமுகவின் குரல் ஒலிக்கிறது. கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் திமுக பேசுகிறது. மாநிலத்திற்காக மட்டுமல்ல நாட்டின் நலனுக்காகவும் சிந்திக்கும் இயக்கமாக இருந்திருக்கிறது திமுக. இந்தியாவிற்கு ஒரு பிரச்சனை வந்த போது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு இந்தியாவை ஆதரித்தார் அண்ணா. அதே போல தான் இந்தியாவை ராட்சத பலத்தோடு ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று பாஜக அல்லாத தலைவர்களை ஒன்று திரட்ட ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்.

மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. மாநில அரசினர்தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள். மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்ரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும் என்றார் அண்ணா. அதே போன்றதொரு நிலை தற்போது உருவாகியிருக்கும் நிலையில் பிற மாநில தலைவர்களை அணி சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்டாலின். கலைஞர் சிலை திறப்பின் போது இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை அழைத்துவந்து ஒரே மேடையில் அமர்த்தும் திறன் ஸ்டாலினுக்கு இருந்தது. அதே திறத்தோடு தான் இப்போது பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையவும் முயற்சிகளை எடுக்கிறார். 

கலைஞர் இருந்த வரை, ஸ்டாலினை ஒரு நல்ல நிர்வாகி ஆனால் நல்ல தலைவரா என்று தெரியாது என்ற விமர்சனம் அவர்மீது இருந்தது. ஆனால், ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் என்று எழுதும் அளவிற்கு இருந்த கட்சியை, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பிற்கு கொண்டுவந்திருக்கிறார். அண்ணாவைப் போல, தன் தந்தை கலைஞரைப் போல தான் ஒரு நல்ல நிர்வாகி மட்டுமல்ல நல்ல தலைவரும் கூட என்பதை நிரூபித்திருக்கிறார். தன் செயல்பாடுகளால் தமிழ்நாட்டிற்கு மட்டுமானவராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவராக ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
Embed widget