மேலும் அறிய

இன்னும் 3 நாட்களில் முழு கொள்ளளவை எட்டவுள்ள வீராணம் ஏரி- மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை 3 நாட்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்ப உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வினாடிக்கு ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு, 3 நாட்களில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி*

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.  சோழர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியானது வீரநாராயணபுரம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழக்கும் முக்கிய நீராதராமாகவும் விளங்குகிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும்.

தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கீழணைக்கு வந்தது. 9 அடியை கொண்ட இந்த அணையில் நீர்மட்டம்  7.50 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில்  40 கள அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் அதன்படி கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை எட்டியதால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்ற வாரம் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டுவருகிறது. கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் சென்ற வாரம் 41.10 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று  46 அடியாக உயர்ந்தது. 

வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை 3 நாட்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்ப உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரியின் பாசன வசதியால் இந்த ஏரியை சுற்றியுள்ள சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசன வசதி பெறுகிறது.

இதனால் இந்த ஏரியானது சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியமான பாசன நீர் ஆதாரமாக உள்ளது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஏரியில் மராமத்து பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் வெகு நாட்களுக்கு பிறகு ஏரிக்கு நீர்வரத்து அதிகரத்துள்ளது தங்களுக்கு ஆதரவாகவும் மகிழ்ச்சியும் அளிப்பதாக ஏரியை சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் மதிழ்ச்சி தெரிவித்தனர் , ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயம் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது எனவும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget