Chennai Power Shutdown 05.06.2025: சென்னையில் நாளை 30 பகுதிகளில் மின் தடை! லிஸ்டில் உங்கள் பகுதி இருக்கா?
Chennai Power Shutdown 06.05.2025: சென்னையில் நாளை பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் நாளை சித்தலப்பாக்கம், மாடம்பாக்கம், கோவூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Chennai Power Shutdown: சென்னையில் மின்சார மாத பராமரிப்பு பணியின் நிமித்திமாக சென்னையில் உள்ள சில இடங்களில் மாதம் ஒரு நாள் மின் தடையானது செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் அரை நாள் மின் தடையை செய்து வருகிறது. இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் மேற்க்க்கொண்டு சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 05.06.2025
இந்நிலையில், நாளை(05.06.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வியாழக்கிழமை (05.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
சித்தலப்பாக்கம்:
TNHB காலனி,மாம்பாக்கம் பிரதான சாலை, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, வள்ளுவர் நகர், ஜெயா நகர், விவேகானந்த நகர்
மாடம்பாக்கம்:
இந்திரா நகர், சாந்தி நிகேதன் காலனி. தம்பையா ரெட்டி காலனி, பார்வதி நகர் வடக்கு, காமாட்சி நகர், பாலாஜி நகர், கர்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், ஸ்ரீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர், அண்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
கோவூர்:
தண்டலம்,ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம்,மணிமேடு, தாரப்பாக்கம், சிபி கார்டன், பாரதியார் தெரு (அம்பாள் நகர்), ரோஜா தோட்டம், வனிகர் தெரு
அம்பத்தூர்:
மில்லினியம் டவுன் கட்டங்கள் I, II & III,பார்க் சாலை,யுஆர் நகர்,பாலாஜி நகர்,குப்புசாமி தெரு, ஜெமி கலவை, கலெக்டர் நகர், எம்.எம்.எம் மருத்துவமனை அருகில், எஸ்.எம். நாராயணன் நகர், ராம் நகர், கலைவாணர் காலனி, 11 கே.வி. பம்பிங் நிலையம், HT சேவை பகுதி, வடக்கு அவென்யூ சாலை, கொரட்டூர் ரயில் நிலையம் & முன்பதிவு அலுவலகம், கொரட்டூர் பேருந்து நிலையம், 61வது முதல் 72வது தெருக்கள், துரைசாமி 1வது & 2வது தெருக்கள், தனபால் செட்டி 1வது & 2வது தெருக்கள், ரயில் நிலைய சாலை, VOC 1வது & 2வது தெருக்கள், லட்சுமி முடலை 1 முதல் 3வது தெருக்கள்
மின் தடை செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் செல்ஃபோனிற்கு சார்ஜ் போடுதல், தேவையான அளவு தண்ணீர் இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்






















