Thug Life: பிரச்னையை ஓரம் கட்டு.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
Thug Life Pre Booking: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம், ப்ரீ புக்கிங்கில் கோடி கணக்கில் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thug Life Pre Booking: நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் மற்றும் கமல் காம்பினேஷனில் தக் லைஃப் படம் உருவாகியுள்ளது.
எதிர்பார்ப்பில் தக் லைஃப்:
தக் லைஃப் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நாயகன் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் சினிமா விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஹைதராபாத் மற்றும் செர்பியா நாட்டிலும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மணிரத்னத்தின் இதயபூர்வமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தக் லைஃப் படம் குறித்து ஹிண்ட் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை கூட்டியது.
மனதை உருக வைத்த முத்தமழை
இப்படத்தில் கமலுடன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் முத்தமழை பாடல்கள் இணையத்தை கலக்கிஏ வருகிறது. குறிப்பாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி குரலில் முத்தமழை பாடலை கேட்டு திரை பிரபலங்களின் மனதும் கரைந்து போனது. சின்மயி ரசிகர்களும் இப்பாடலை ரிபீட் மோடில் கேட்டு ரசித்து வருகிறார்கள். குறிப்பாக சின்மயி அப்பாடலைப் பாடிய விதத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆனால், திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தியில் சின்மயியும் தமிழ் மொழியில் பாடகி தீயும் பாடியிருந்தனர். தீ பாடியது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதில் பெஸ்ட் யார் என்ற ஒப்பீடும் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு சின்மயி நச் என பதில் அளித்திருந்தார். அவரவர் குரலில் அவருக்கென்று தனித்துவம் இருக்கிறது என சின்மயி தெரிவித்திருந்தார்.
300 கோடி பட்ஜெட்
சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் டிரைலரில் தாதாவாக கமல்ஹாசன், குட்டி தாதாவாக சிம்பு இருவரும் தங்களுக்கே உரிய உடமொழிகளுடன் பிணைப்புடன் ஆரம்பித்து, எதிரெதிர் துருவங்களாக உருவெடுப்பதாக திரைக்கதை நகர்வதை டிரைலர் காட்சிகள் உறுதி செய்தன. கமல்ஹாசனின் கெட்டப்புகளும் வசன உச்சரிப்புகளும் தனித்து கவனம் ஈர்க்க, மற்றொரு பக்கம் சிம்புவின் ஆக்ஷனில் அனல் பறக்கிறது. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் நாளை (ஜூன் 5) வெளியாகிறது. மணிரத்னம் - கமல் கூட்டணியில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்
தக் லைஃப் படம் வெளியாவதற்கு முன்பே மொழி பிரச்னையில் சிக்கி சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு கர்நாடக நீதிமன்றம் மன்னிப்பு கோர கெடு விதித்தது. கமலுக்கு ஏன் இவ்ளோ ஈகோ என்றும் கேள்விக்கணைகளை வீசி வருகின்றனர். இந்த விவகாரத்தால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளனர். பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், தக் லைஃப் படத்திற்கான ப்ரீ புக்கிங் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையை படைத்திருக்கிறது. கமல் படங்களிலேயே தக் லைஃப் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ.20 கோடியை தாண்டி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். நாளை இப்படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.





















