Spreading Flu : பரவும் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்..
தமிழ்நாட்டில் இன்று 31-வது கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் இம்மாத இறுதிக்குள் செலுத்திகொள்ளுமாறு வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இன்று 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் முகாமை பார்வையிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தயக்கம் காட்டாமல் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இதுவரை 5.38 கோடி பேருக்கு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தயக்கம் காட்டாமல் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசு இம்மாதம் 31-ஆம் தேதி வரை இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. மக்கள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நடப்பு மாதத்திற்குள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். இம்மாதம் 25-ஆம் தேதி கடைசி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.” என்று தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு விடுமுறையா?
மாநிலத்தில் குழந்தைகளுக்கு இடையே காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஆனால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு பதற்ற நிலை இல்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உடல்நிலை சரியானதும் அனுப்பினால் போதும். ஃபுளூ காயச்சல் வழக்கமான பருவமழை காய்ச்சல்தான். மருத்துவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மருத்துவ குழுவினர் பள்ளிக்கு செல்ல இருக்கிறார்கள். அப்போது மாணவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படும்.
தற்போதைய சூழலில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், பதற்றமான நிலை இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் ஒவ்வோரு புதன்கிழமையும் அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்படும். தமிழ்நாட்டில் தற்போதைய நிலையிஒல் 1,044 பேருக்கு இன்ஃபுளூயன்சா காய்ச்சல் ஏற்படுள்ளதாகவும் நிலை தீவிரமடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பருவமழை கால காய்ச்சலை கண்டு பொதுமக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.