மேலும் அறிய

3 ஆயிரம் கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன- அமைச்சர் சேகர்பாபு

வள்ளலார் பிறந்தநாள் முப்பெரும் விழா குறித்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வக்ஃபு வாரியம் தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், 3 ஆயிரம் கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ' வள்ளலார் -200 ' எனும் பெயரில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆன்றோர் சான்றோர் அனைவருக்கும் விழா எடுத்து வருகிறோம் , தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முதல்வர் வரைப்படத்தை பார்த்து ஒப்புதல் வழங்கிய பிறகு பணிகள் தொடங்கும். வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ம் தேதி 'தைக் கருணை ' நாளாக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். 

'வள்ளலார் -200 ' எனும் பெயரில்  முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் அக்டோபர் 5 ம் தேதி நடைபெற உள்ளது. வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156ம் ஆண்டு, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152 ம் ஆண்டை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. வள்ளலார் பக்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினத்தில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. 

இந்து அறநிலையத்துறை சொத்துகள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும், இந்த ஆட்சியில் இதுவரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகள்  3 ஆயிரம் கோடிக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. 

ரேவர் கருவி மூலம் இந்து அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம். இதுவரை  80ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு  செய்துள்ளோம். இந்து அறநிலையத்துறை சொத்துகள் கண்டறியப்பட்டு அவற்றை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தாமன சொத்து பட்டியல் முழுமையாக வெளியிடப்படும். 

வக்ஃபு வாரியம்  தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து விசாரிக்க சொல்லி இந்து அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்ற பிறகு இந்த விசயத்தில் முழு கருத்தையும் தெரிவிப்போம் " என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Embed widget