மேலும் அறிய

MNM : கஷ்டப்படும் கல்லூரி மாணவிகள்: கேரளாவை பின்பற்றுங்க! - தமிழ்நாடு அரசுக்கு மநீம வேண்டுகோள்!

MNM : மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

கேரள மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளத போலவே, 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

சமீபத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் மாதவிடாய் மற்றும் பேறு கால விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளா அறிவித்திருந்தது. இத்தகைய அறிவிப்பு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளர் மூகாமிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்தியுள்ள கேரள அரசை மநீம பாராட்டுகிறது.

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கேரள அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.

மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கேரளவின் முன்னெடுப்பு:

பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என பல்வேறு முன்னெடுப்புகளுக்கு கேரளா முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளாவில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து பல்கலைக்கழகம் (CUSAT) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின்படி, பிஎச்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைய உள்ளனர்.  

வருகைப் பதிவேட்டில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், மாதவிடாய் விடுப்புக்கு பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டர் வகுப்புக்கும் 2 சதவீத கூடுதல் விடுப்பு, மாதவிடாய் நாட்களுக்காக ஒதுக்கப்படும்.

தற்போது 75 சதவீத வருகைப் பதிவேட்டைக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே செமஸ்டர் தேர்வை எழுத முடியும். அதைவிடக் குறைவான வருகைப் பதிவேடு கொண்டிருப்பவர்கள் துணை வேந்தருக்குக் கடிதம் எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல அந்த மாணவர்கள், மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் மாதவிடாய் விடுப்புக்கு, மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. மாணவிகள் ஒரு கடிதத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது. 

மேலும் வாசிக்க..

Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
Embed widget