மேலும் அறிய

lKA2024: சர்வதேச சமையல் ஒலிம்பிக்! 3 தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கிய சென்னை அமிர்தாஸ் மாணவர்கள்!

ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 

ஜெர்மனியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் lKA2024 - சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 

சமையல் ஒலிம்பிக்:

இன்டர்நேஷனல் கோச்குன்ஸ்ட் ஆஸ்டல்லங் எனப்படும் உலகின் மிகப் பிரமாண்டமான IKA சமையல் ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இது,  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இதில் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சார்பில், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்கள், ஜூனியர் பிரிவில் போட்டியிட்டனர். போட்டியிட்ட சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு செஃப் கார்த்திக் மற்றும் செஃப் செந்தில் குமார் ஆகியோர் பயிற்சியாளராக பங்கேற்றனர்.  

தங்கப்பதக்கம்:

இதன் போட்டிகளில் பங்கேற்ற செஃப் ஸ்ரேயா அனிஷ் - 1 தங்கம் , 2 வெள்ளி பதக்கங்களையும், செஃப் சரவண ஜெகன் மற்றும் செஃப் ஜோகப்பா புனித் ஆகியோர்  தலா ஒரு தங்கம்  மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றனர்.  செஃப் அங்கித் கே ஷெட்டி - 2 வெள்ளி பதக்கங்களையும், செஃப் முலம்குழியில் ஆல்பர்ட் ஆகாஷ் ஜார்ஜ் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். 

உலகெங்கிலும் உள்ள தலை  சிறந்த சமையல் நிபுணர்களுடன் போட்டியிட்டு இந்த பதக்கங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்.   

இது தொடர்பாக தென்னிந்திய செஃப்ஸ் அசோசியேஷன் (SICA) தலைவர் செஃப் தாமு, பொதுச்செயலாளர் சீதாராம் பிரசாத் ஆகியோர் தியாகராயநகர் ரெசிடென்சி டவர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உரையாற்றிய தாமு, தென்னிந்திய செஃப் அசோசியேஷன் அணி 10 பதக்கங்களை வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். வெற்றி பெற்றவர்கள அடுத்த தலைமுறைக்கு ஒரு பாதையைக் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்றும் பெருமைபட தெரிவித்தார். 

அமிர்தா இன்ஸ்ட்டியூட்:

மேலும் இந்த சாதனைக்காக, இந்திய சமையல் கலை வரலாற்றில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்களின் பெயர்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக இந்த அணி 22 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 2000 சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு பதக்கங்களை வென்றுள்ளனர் என்றும்,  இந்த வெற்றியின் பின்னணியில் SICA பயிற்சியாளர்களின் பங்களிப்பும் மிகப்பெரிய அளவில் உதவியது என்றும் செஃப் தாமு தெரிவித்தார். 

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ன் தலைவர் பூமிநாதன், இந்த வெற்றி இனிமேல் இந்தியா வெல்லப்போகும் தங்பதக்கங்களுக்கு முதல் படியாக இருக்கும் என்று தெரிவித்தார். 3 தங்பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு தென்னிந்திய செஃப் அசோசியேஷன் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். சமையல் கலை என்றாலே தென்னிந்தியா தான் என்கிற நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்

தென்னிந்திய செஃப் அசோசியேஷன் பொதுச்செயலாளர் சீதராம்பிரசாத், சென்னை மற்றும் பெங்களூருவில் SICA வால் நடத்தப்பட்ட போட்டிகளின் மூலம் போட்டியாளர்கள் கூர்தீட்டபட்டனர் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget