மேலும் அறிய
சென்னையை சுற்றியுள்ள வடக்கு மண்டலத்தில் காலையில் அறிய வேண்டிய செய்திகள்!
வேலூர் நகைக்கடை கொள்ளை, பப்ஜி விளையாட வீட்டில் பணம் திருடிய சிறுவர்கள், தொடரும் நீட் தேர்வு மரணங்கள் உள்ளிட்ட முக்கிய செய்தி இதோ

சென்னை மாநகராட்சி
1. காஞ்சிபுரத்தில் நடந்து செல்பவர்களிடம் வழிகேட்பது போல் நடித்து நகைகளை பறித்துச் சென்ற கொள்ளையனை, போலீசார் கைது செய்தனர்.
2. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வர தடை விதித்துள்ளனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் யாரும் திருவண்ணாமலை வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

3. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி.யிடம் 5 மணி நேரம் நடைபெற்ற குறுக்கு விசாரணை டிச.20-க்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஓமிகரன் தொற்று அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று அவரது உடனிருந்தவர்கள் மற்றும் தெருவில் உள்ள அனைவருக்கும் செய்யாறு சுகாதாரத் துறை சார்பாக COVID பரிசோதனை செய்தனர்.

5. வேலூர் நகை கடை கொள்ளை தொடர்பாக 4 டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படை அமைத்து விசாரணை. சிசிடிவி வீடியோவில் ஒருவர் மாஸ்க் அணிந்திருந்தார். அதனைக் கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. திருச்சி லலிதா ஜிவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
6. வீடு வாங்குவதற்காக தந்தை சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் ரூ.8லட்சத்தை, பப்ஜி விளையாடுவதற்காக அவரது மகன்கள் திருடியுள்ளனர். அந்த சிறுவர்களிடம் இருந்து பணத்தை அபகரித்ததாக, வணிக வரித் துறையில் உதவியாளராகப் பணியாற்றுபவர், அவரது மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
7. திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வசித்து வரும் சுஜித் என்பவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து, கலந்தாய்வினை எதிர்பார்த்து, ஆவலுடன் காத்திருந்தார். இருந்தும் சீட் கிடைக்காததால் தற்கொலை.
8. சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரண்டாம் கட்டமாக ரூ.17.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

9. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
10. கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சிட்பண்ட்ஸ், பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion