மேலும் அறிய
சென்னையை சுற்றியுள்ள வடக்கு மண்டலத்தில் காலையில் அறிய வேண்டிய செய்திகள்!
250 வீட்டிற்கு நோட்டீஸ், 928 கிராம் தங்கம் பறிமுதல், மேல்மருவத்தூரில் இருமுடி விழா தொடங்கியது.

சென்னை மெட்ரோ
1. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த 250 வீட்டின் உரிமையாளர்களுக்கு காலி செய்யும்படி வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
2. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2021--2022ம் ஆண்டுக்கான சக்திமாலை இருமுடிவிழாவினை நேற்று ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.
3. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளை உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிகளுக்கு உள்கட்சி தேர்தலில் போட்டியிட 500க் கும் மேற்பட்டோர் நேற்று பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து விருப்ப மனுவை பெற்று சென்றனர்.
4. கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5000 கோடி வருவாய் கிடைக்கும் என்று அனைத்து எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
5. இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கால்களில் அணியும் செருப்புகள் மற்றும் உள்ளாடைகளுக்குள் மறைத்து எடுத்துவந்த ரூ.45.5 லட்சம் மதிப்புடைய 928 கிராம் தங்கம் மற்றும் மின்சாதனப் பொருட்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து,6 கடத்தல் பயணிகளை கைது செய்து விசாரணை.
6. திருவண்ணாமலையில் தங்கையை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற அண்ணன் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
7. சென்னை கொளத்தூரில் குடும்பத்திற்குள் கடன் பிரச்னையால் நடந்த வாக்குவாதத்தில் மகள் மற்றும் மகள் இருவரும் தங்களுடைய தாய் தந்தையை விஷம் வைத்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. கால்நடை துறையில் காலியாக உள்ள 1,450 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
9. திருவள்ளூரில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் புறப்பட்டது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோவிற்கு வழி விடவில்லை எனக்கூறி அதன் டிரைவர், அரசு பேருந்தை முந்தி சென்று வழிமறித்து, பஸ் டிரைவர் கார்த்திகேயனை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
10. கடந்த 10ம் தேதி வரை பதிவுத் துறையின் வருவாய் ரூ 9000 கோடியை கடந்துள்ளது. நடப்பு ஆண்டில் ரூ15,000 கோடி வருவாய் இலக்கினை அடைய அனைத்து உதவி பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்களை அரசின் வருவாயை பெருக்குவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
க்ரைம்
அரசியல்
ஆன்மிகம்
Advertisement
Advertisement