தாமரை தண்ணீரில் மிதக்கும் தமிழ்நாட்டில் மிதக்காது... பாஜகவை கிண்டல் செய்த தங்கபாலு
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான கேள்விக்கு , தனக்கென ஜாதகமா தெரியும் என நகைச் சுவையாக சொன்ன தங்கபாலு

ஓமந்தூராரின் புகைப்படத்திற்கு மரியாதை
ஓமந்தூரார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில், முன்னாள் மாநிலத் தலைவர் தங்க பாலு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், மேலும் பல காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு ஓமந்தூராரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்க பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.
ஓமந்தூரார் அவர் சுதந்திர தின போராட்டத் தியாகி என்றும் , மேலும் கர்மவீரர் காமராஜர் உடன் பணியாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்,
மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான கேள்விகளுக்கு ,
தனக்கென ஜாதகமா தெரியும் என நகைச்சுவையாக கிண்டலடித்தார்
மேலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை தண்ணீரில் மிதக்கும் தமிழ்நாட்டில் மிதக்காது என நகைச்சுவையோடு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.