Parandur Airport: தமிழ்நாட்டில் புதிய சர்வதேச விமான நிலையம்: கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில்
தமிழ்நாட்டில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான நிலையம்:
தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கனிமொழி சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அதிகரிக்கும் போக்குவரத்து:
தமிழ்நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, சென்னையில் மேலும் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு, தமிழ்நாட்டு அரசை, மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் தமிழ்நாடு அரசு சார்பாக மத்திய அரசிடம் முன்முழியப்பட்டன.
கனிமொழி சோமு கேள்வி:
இந்நிலையில், புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில்,டாக்டர் கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சென்னை பரந்தூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை பரந்தூரில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையமானது ரூ. 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படும் என கூறப்படுகிறது.
சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைகிறது!
— Dr Kanimozhi NVN Somu (@DrKanimozhiSomu) August 1, 2022
இன்று மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்! #KANIMOZHINVNSOMU #RajyaSabhaMP #ChennaiAirport pic.twitter.com/klXi3hOB0h
இந்த புதிய விமான நிலையத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்