மேலும் அறிய

Gladiator 2 Review : கங்குவா இல்ல இதுதான் உண்மையான பிரம்மாண்டம்...கிளாடியேட்டர் 2 திரை விமர்சனம்

Gladiator 2 Review in Tamil : 2000 ஆம் ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்த கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது

கிளாடியேட்டர் 2

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுத் திரைபடம் கிளாடியேட்டர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் இப்படத்தையும் இயக்கியுள்ளார். நாயகனாக பால் மெஸல் (Paul Mescal ) நடித்துள்ளார். கிளாடியேட்டர் 2 படத்தின் விமர்சனத்திற்குள் செல்வதற்குள் முதல் பாகத்தின் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

கிளாடியேட்டர் முதல் பாகம் சுருக்கம்

ரோமப் பேரரசர் சீஸர் மார்கஸ் ஒளரேலியஸ் (Marcus Aurelius) ஐரோப்பா முதல் ஆப்பிரிக்கா வரையில் தனது ஆட்சியை நிலைநாட்ட போர் புரிகிறார். இந்த போர்களில் படைத்தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டு தருகிறார் மாக்ஸிமஸ் (Maximus). சீஸருக்குப் பின் ஆட்சியில் அமர காத்திருக்கிறார் அவரது மகன் கொமொடஸ். ஆனால் சீஸர் தனக்குப்பின் தனது படைத்தலைவன் மாக்ஸிமஸிடம் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஒப்படைக்க விரும்புகிறார். இது பிடிக்காத கொமொடஸ் தனது தந்தையை கொலை செய்து மாக்ஸிமஸின் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய உத்தரவிடுகிறார். தப்பிச் செல்லும் மாக்ஸிமஸ் அடிமையாக விற்கப்பட்டு கிளாடியேட்டராக (மக்கள் பொழுதுபோக்கிற்காக சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவினர்) மாற்றப்படுகிறார். தனது குடும்பத்தை இழந்து நிற்கும் கிளாடியேட்டராக இருந்து மக்களின் ஆதரவை வென்று கொமொடஸின் எதிர்க்க திட்டமிடுகிறார். இதனை சாத்தியப்படுத்த கொமொடஸின் தங்கை மாக்ஸிமஸின் முன்னாள் காதலியுமான லூசில்லா அவருக்கு உதவி செய்கிறாள்.இறுதியில் கொமொடஸின் கொடுங்கோள் ஆட்சியில் இருந்து ரோம் மக்களை விடுவித்து  தானும் இறந்தும் விடுகிறார் மாக்ஸிமஸ். 

கிளாடியேட்டர் 2 கதை

Gladiator 2 Review : கங்குவா இல்ல இதுதான் உண்மையான பிரம்மாண்டம்...கிளாடியேட்டர் 2 திரை விமர்சனம்

மாக்ஸிமஸ் கொமோடஸின் இருந்து ரோம் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்து 18 ஆண்டுகள்க்குப் பின் நடைபெறும் கதை தான் கிளாடியேட்டர் 2. ரோம் மீண்டும் ஒருமுறை கெட்டா மற்றும் காராகெல்லா ஆகிய இரட்டை சகோதரர்களின்   கொடுங்கோள் ஆட்சியில் உள்ளது. போர்கள் தொடுப்பது கொலை செய்வது மட்டுமே இரட்டை அரசர்களின் ஒரே நோக்கம். முந்தய பாகத்தில் படைத்தலைவராக மாக்ஸிமஸ் இருந்த இடத்தில் தற்போது அகாசியஸ் இருக்கிறார். மாக்ஸிமஸ் மற்றும் அவரது காதலியாக லூசில்லாவிற்கு பிறந்த லூசியஸ் தான் இப்படத்தின் நாயகன். அரசாழ சட்டப்பூர்வமான வாரிசு லூசியஸ் என்பதால் அவனை கொலை செய்ய பலர் முயற்சி செய்கிறார்கள். இதனால் அவனது அண்ணை லூசில்லா அவனை தப்பியோட வைக்கிறார். தப்பியோடிய லூசியஸ்  ரோமானியர்களுக்கு  எதிராக ஆப்பிரிக்கர்கள் சார்பாக போரிடுகிறான். போரில் கைது செய்யப்பட்டு அடிமையாக விற்கப்படுகிறான் லூசியஸ். தனது தந்தை மாக்ஸிமஸ் போலவே கிளாடியேட்டராக இருந்து மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் அமைதியை நிலைநாடுவதே கிளாடியேட்டர் 2 ஆம் பாகத்தின் கதை.

Gladiator 2 Review : கங்குவா இல்ல இதுதான் உண்மையான பிரம்மாண்டம்...கிளாடியேட்டர் 2 திரை விமர்சனம்

கதை ரீதியாக. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் பெரியளவில் வித்தியாசமில்லை. ஆனால் திரையனுபவமாக கிளாடியேட்டர் 2 இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  முதல் பாகம் 2000 ஆம் ஆண்டு அன்றை தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு பெரும்பாலான காட்சிகள் கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளால் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த பாகத்தில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களைக் நிஜமாக நடிக்க வைத்து ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர். அதேபோல் சண்டைக்காட்சிகள் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் கற்பனை கலந்து இன்னும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடல்போல போட்டி மேடை அமைத்து அதில் வீரர்கள் சண்டை போடுவது , குரங்குகளுடன் சண்டையிடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களின் ஆசைக்கு தீனி போடுகின்றன. 

கதை ரீதியாக இப்பாகத்தில் அடிமை வர்த்தகராக வரும் டென்ஸல் வாஷிங்டன் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஒரு அடிமையாக கொண்டு வரப்பட்டு தந்திரங்கள் செய்து ஒட்டுமொத்த அரசை தன்பிடியில் கொண்டு வர அவர் போடும் திட்டங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. டயலாக் டெலிவரி உடல்மொழியில் அட்டகாசம் செய்திருக்கிறார் டென்ஸல். 

Gladiator 2 Review : கங்குவா இல்ல இதுதான் உண்மையான பிரம்மாண்டம்...கிளாடியேட்டர் 2 திரை விமர்சனம்

முதல் பாகத்தில் தனது குடும்பத்தை இழந்து நிற்கும் மாக்ஸிமஸாக ரஸல் க்ரோ ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்படத்தில் பாஸ் மெஸல் ரஸல் க்ரோ அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தோற்றமாகவும் நடிப்பு ரீதியாகவும் தன்னுடைய அதிகபட்ச உழைப்பை பால் வழங்கியிருக்கிறார் என்றாலும் இந்த கதாபாத்திரத்துடன் எமோஷனலாக ரசிகர்களுக்கு பெரிய கனெக்ட் ஏற்படுவதில்லை. முதல் பாகத்தில் இருந்த அதே உணர்ச்சியைக் கொண்டே இந்த படத்தில் அப்லை செய்தது வர்க் அவுட் ஆகவில்லை. தனது தந்தை மாக்ஸிமஸைப் பற்றி லூசியஸ் பல இடங்களில் நினைவு கூர்ந்தாலும் இது அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. 

கிளாடியேட்டர் 2 உருவாக்கம் சார்ந்து பல புதிய அனுபவங்களை வழங்குகிறது என்றாலும் முதல் பாகத்தின் ஆன்மாவை அதனால் இரண்டாம் பாகத்தில் தக்க வைக்க முடியவில்ல என்றுதான் சொல்ல வேண்டும் . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget