மேலும் அறிய

ICC Champions Trophy 2025 :ட்விஸ்ட் வைத்த மழை.. சூடுப்பிடித்த சாம்பியன்ஸ் டிராபி.. குரூப் பி பிரிவில் அரையிறுதியில் யார்?

ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் இருந்து எந்த அணியும் தகுதி பெறவில்லை. 

சாம்பியன்ஸ் டிராபி 2025:

பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைப்பெற்று வருகிறது, இந்த தொடரில்  குரூப்- பி பிரிவில் தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான  போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக , இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன, இதனால் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் மூன்று புள்ளிகளை பெற்றுள்ளது. ஒரு வேளை இந்த போட்டி மழை பெய்யாமல் நடந்து இருந்தால் இரு அணிகளில் ஒரு அணி அரையிறுதிக்கு மிக அருகில் செல்லும்

இந்தியாவும் நியூசிலாந்தும் குரூப் ஏ-யிலிருந்து அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. ஆனால் குரூப் பி-யில் பரபரப்பான முடிவு எட்ட உள்ளது. அதில் எந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை இதில் காண்போம். 

தென்னாப்பிரிக்கா: 

போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற நல்ல வாய்ப்பு  உள்ளது. இதன் மூலம் அவர்களின்  ரன் ரேட் (NRR) +2.140 ஆக உள்ளது. தங்களின் இறுதி லீக்  போட்டியில் இங்கிலாந்தை வென்றால் தென் ஆப்பிரிக்கா  அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அவர்கள் தோற்றாலும், இங்கிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் தென் ஆப்பிரிக்க அணியால்  முன்னேற முடியும்.

ஆஸ்திரேலியா: 

ஆஸ்திரேலியாவின் அரையிறுதி விதியும் அவர்களின் கைகளில்தான் உள்ளது. இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஆஸ்திரேலிய அணி தகுதி பெற தங்கள் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். இருப்பினும், அவர்கள் தோற்றால்,  தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்

இங்கிலாந்து: 

ஆஸ்திரேலியாவிடம் முதல் லீக் போட்டி தோல்விக்குப் பிறகு  ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். குரூப் பி-யில் உள்ள நான்கு அணிகளின் தலைவிதியும் பிப்ரவரி 26 (புதன்கிழமை) அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து போட்டியை பொறுத்தது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் தங்கள் இறுதி குரூப் போட்டிகளில் தோற்றால், இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இருப்பினும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை தோற்கடித்தாலும், இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டையும் தோற்கடிப்பதன் மூலம் தகுதி பெற முடியும்.

ஆப்கானிஸ்தான்: 

தொடக்க ஆட்டத்தில் கடும் தோல்வியடைந்த பிறகு, ஆப்கானிஸ்தானின் தகுதி நம்பிக்கைகள் இப்போது அவர்களின் கடைசி இரண்டு போட்டி மற்றும் பிற அணிகளின்முடிவுகளைப் பொறுத்தது. அரையிறுதிப் போட்டிக்கான போட்டியில் தொடர்ந்து இருக்க இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டையும் ஆப்கானிஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.

குரூப் பி புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி  தோல்வி முடிவு இல்லை
தென்னாப்பிரிக்கா 2 1 0 1
ஆஸ்திரேலியா 2 1 0 1
இங்கிலாந்து 1 0 1 0
ஆப்கானிஸ்தான் 1 0 1 0

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget