சூர்யா,பாபி தியோல் , திஷா பதானி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சூர்யா, திஷா பதானி ,யோகி பாபு ஆகியோரின் ஓவர் ஆக்டிங்க் ரசிக்கும்படி இல்லை.
நிகழ்காலத்தில் ஒரு கதை நடக்க இன்னொரு பக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடர்கிறது கங்குவாவின் கதை. கதை என்ற ஒன்று இருந்தாலும் அதை சொல்லும்விதம் தெளிவில்லாமல் இருப்பதால் ரசிக்கும்படி இல்லை.
பெருமாச்சியின் இளவரசனான கங்குவா ( சூர்யா) தன் இனத்தை எதிரிகளிடம் இருந்து காத்து கொடுவனின் மகனாக காப்பாற்றுவதே கங்குவா படத்தின் கதை.
மருத்துவ ஆய்வகத்தில் இருந்து தப்பித்து வரும் சிறுவனுக்கும் சூர்யாவுக்கு என்ன தொடர்பு என எந்த வித தெளிவு இல்லாமல் 1000 ஆண்டு கடந்த காலத்திற்கு தாவுகிறது படம்.
திரைப்படத்தில் வரும் கடந்த கால காட்சிகள் ரசிகர்களை கவரும்படியாக இருந்தாலும் வசனம் முதல் திரைக்கதை வரை தெளிவில்லாமல் இருப்பதால் ரசிக்கும்படியாக இல்லை.
தேவி ஸ்ரீ பிரசாத் இசை திரைப்படத்திற்கு பலம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.
கங்குவா படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டிற்கு நியாயம் சேர்க்கும் வகையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சிறுவனுக்கு கொடுத்த சத்தியத்தை காக்க முடியாத தலைவன் அந்த சத்தியத்தை நிறைவேற்ற மறுபிறப்பு எடுக்கிறான்.