Onam 2022 : ஓணம் ஸ்பெஷல் சாப்பாடு (சத்யா) எங்க சாப்பிடலாம் தெரியுமா? சூப்பர் ஐடியாஸ் இங்கே இருக்கு..
வீட்டிற்கு வரும் மகாபலி சக்கரவர்த்திக்கு 25-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை வாழை இலையில் வைத்து தங்கள் அன்பை வெளிக்காட்டுகின்றனர்
கேரளாவில் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகையாகும். இது திருவோணம் என்று அழைக்கப்படுகிறது. திருவோணம் பண்டிகை துவக்கம் ஆகஸ்ட் 20-ல் ஆரம்பித்து செப்டம்பர் எட்டாம் தேதி வரையிலும் கொண்டாட்டங்களாக நிறைந்து இருக்கிறது இந்த எட்டாம் தேதி அன்று மகாபலி சக்கரவர்த்தி தங்கள் இல்லத்துக்கு வருவதாக கேரளத்து மக்கள் நம்பிக்கையுடன் அவரை வரவேற்கிறார்கள்.
இந்த நன்னாளில் வீடுகளை அலங்கரித்து வீட்டு வாசல்களில் ரம்யமான ரங்கோலிகளை வரைந்து ஓணத்தை கொண்டாடுகின்றனர், அப்படி வீட்டிற்கு வரும் மகாபலி சக்கரவர்த்திக்கு 25க்கும் மேற்பட்ட உணவு வகைகளை வாழை இலையில் வைத்து தங்கள் அன்பை வெளிக்காட்டுகின்றனர், இது முழுவதும் சைவ உணவு என்பது குறிப்பிடத்தக்கது
இப்படி கேரள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருகோணம் பண்டிகையின் சத்யா உணவுகள் இந்த கேரளத்து மக்கள் எங்கெங்கு உலகம் முழுவதிலும் எங்கெல்லாம் வசிக்கின்றாரோ அங்கு எல்லாம் இந்த சத்யா உணவுகள் தயாரிக்கப்பட்டு மகாபலி சக்கரவர்த்திக்கு அன்போடு அழைக்கப்படுகிறது
இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று திருவோணம் சத்யா உணவுகள் உலகம் எங்கிலும் இருக்கும் முக்கிய நகரங்களின் ஓட்டல்களில் கிடைக்கின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள உணவகங்களில் சத்யா உணவுகள் உண்பதற்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக பார்சல் களிலும் கிடைக்கின்றன அவை எங்கு எங்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம்
கப்பா சக்க காந்தாரி :
இந்த ஆண்டு ஓணத்தை முன்னிட்டு, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கப்ப சக்க காந்தாரி,கேரளாவைச் சேர்ந்த சமையல்காரர்கள் தயாரித்த 26 பாரம்பரிய சைவ உணவு வகைகளை வழங்குகிறார்கள் இதற்கான பார்சலில் ஐந்து பேருக்கு தேவையான சத்யா உணவுகள் இருக்கும். இந்த பார்சல் பெட்டிகளனது செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 8 வரை கிடைக்கும். இது முழுக்க முழுக்க பார்சல் கொண்டு செல்ல மட்டுமே.அங்கு சாப்பிடுவதற்கு கிடைக்காது.
இது தவிர, உணவகத்தில் நான்கு வகையான பாயாசம், ஊறுகாய், கேரள சிப்ஸ் மற்றும் ஓணக்கொடி (கேரளா பாணியிலான புத்தாடைகள்) அடங்கிய 'ஓணம் பரிசுப் பெட்டி'யும் வழங்கப்படுகிறது.
கேரளாவிலிருந்து வரும் பாயாச வகைகளுடன் கூடிய சிறப்பு 'ஓணம் சத்யா பாயசம்' வழங்குகிறார்கள்.
மேலும் KCK இன் நுங்கம்பாக்கம் கிளையில் ஓணம் சத்யாவை அனுபவிக்க நீங்கள் போன் செய்தால் போதும். இது 26 வகையான ஊனம் சத்யா உணவுகளை வழங்குகிறது.
என்டே கேரளம்:
சென்னையில் போயஸ் கார்டன் மற்றும் அண்ணாநகர் ஆகிய இரண்டு கிளைகளைக் கொண்ட என்டே கேரளாவில் நான்கு வகையான பாயாசங்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட உணவுகளுடன் சிறப்பான ஊனம் சத்யாவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
சவ்ய ராசா:
சென்னையில் உள்ள சவ்ய ராசாவானது, இந்த வருட சத்யா மெனுவில் சுமார் 31 உணவுகளை தயாரித்துள்ளார். உணவகத்தில் ஓண சத்யா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை கிடைக்கும்.
சங்கீதா வெஜ், அடையாறு:
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவகங்களில் ஒன்றான சங்கீதா, 25 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை ஓணம் சத்யாவில் வழங்குகிறது. இந்த ஓனம் சத்யா, உணவு வகைகளனது அடையாறு கிளையில் செப்டம்பர் 8 அன்று கிடைக்கும்.
மால்குடி, சவேரா:
சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் உள்ள மால்குடியில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு 30க்கும் மேற்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
இது மட்டுமல்ல, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு கேரள உணவகங்களில், சத்யா என்னும் வகை உணவு பரிமாறப்படுகிறது