நவராத்திரி விழா: மாலை நேர ஸ்நாக்ஸ்; ஜவ்வரிசி கிச்சடி; ரெசிபி இதோ!
ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி என்ற ரெசிபி விவரம்.
இந்தியாவில் கொண்டாப்படும் பண்டிகைகளிலும் நவராத்தி முக்கியமான ஒன்று. நடப்பாண்டிற்கான நவராத்திரி(Navratri 2022 Date) செப்டம்பர் 26-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை கொண்டாப்படுகிறது. இவ்விழாவின் போது கொலு வைத்து பூஜைகள் செய்யப்படும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் 9வது நாள் ஆயுத பூஜையாகவும், 10வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் பண்டிகையான நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் தினம், தினம் விதவிதமான உணவு வகைகள் செய்து பூஜை செய்து அனைவருடனும் பகிர்வது வழக்கம்.
ஊறவைக்க:
ஜவ்வரிசி - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கிச்சடி செய்ய:
வறுத்த நிலக்கடலை - 1/2 கப்
நெய்- 2 டேபிள் ஸ்பூம்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3 அல்லது 4 (காரத்திற்கேற்ப பயன்படுத்தவும்)
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
தக்காளி- 1/2 கப்
உருளைக்கிழங்கு- ஒரு கப்
கருவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையா அளவு
மிளகுதூள்- தேவையான அளவு
எலுமிச்சை பழச் சாறு- சிறதளவு
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு ஜவ்வரிசியை 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கி வைக்கவும். உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து சிறதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வானலி நன்கு சூடானதும், இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இளஞ்சூட்டில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு கருவேப்பிலை, உருளைக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும். அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து வானலியை மூடி வைக்கவும். சிறது நேரம் கழித்து ஜவ்வரிசியின் நிறம் மாறும். இது ஜவ்வரிசி வெந்துவிட்டதற்கான அர்த்தம். வெளிர் வெள்ளை நிறமாக மாறிய ஜவ்வரிசியுடன், வறுத்த நிலக்கடலையை சேர்த்து கிளறவும். இதோடு கைப்பிடியளவு கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இதோடு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி!
ஜவ்வரிசி உப்புமா ரெசிபி வீடியோ:
மேலும் வாசிக்க..
Navratri 2022: நவராத்திரி திருவிழா நாட்களில் செய்யக்கூடிய சத்துமிக்க உணவு வகைகள் என்ன?
Navratri 2022: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா...?
IND vs AUS 3rd T20 LIVE: முதல் இரண்டு ஓவர்களில் அடித்து ஆடும் க்ரீன்.. அதிரடி காட்டும் ஆஸி..