Jipmer Recruitment: ஜிப்மர் மருத்துவமனை வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
Jipmer Recruitment: ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ( Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research- Jipmer ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Cardiographic Technician
Medical Laboratory Technologist
கல்வித் தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. Cardiac Technology / Cardiac Laboratory Technician / Cardiac Catheterization Laboratory Technology படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியின உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.25,500 அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதித் தேர்வில் 100 MCQ கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு நேரம் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
விண்ணப்ப கட்டணம் :
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
www.jimper.edu.in-என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிகலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.10.2023
https://jipmer.edu.in/sites/default/files/Advertisemnt%20Notice_1.pdf- என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர் இணையதள முகவரி: www.jimper.edu.in.
The Deputy Director (Admn.),
Administration – I (Rect. Cell)
JIPMER Administrative Block,
Dhanvantri Nagar P.O,
Puducherry - 605 006.
தொடர்புக்கு:
இ-மெயில் முகவரி- jipmergrpbandc@gmail.com
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் சந்தேகம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 91-7353945551 என்றில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டும் தொடர்பு கொள்ளலாம்.
*****
திருப்பதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
- துணை நூலகர்
- துணை பதிவாளர்
- ஜூனியர் கண்காணிப்பாளர்
- ஜூனியர் உதவியாளர்
- ஜூனியர் இந்தி உதவியாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர்
- உடற்பயிற்சியாளர்
கல்வித் தகுதி:
- துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- துணை பதிவாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு Pay Level -12, Pay Level-6, Pay Level -3, Pay Level-5 என்ற வரைவுபடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://iittp.plumerp.co.in/prod/iittirupati/staffrecruitment - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
- குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தொடர்புக்கு .-- rmt_queries@iittp.ac.in
பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் - https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed%20advertisement%20-%20Staff%2002-2023.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023