![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TNeGA Recruitment: பொறியியல் பட்டம் பெற்றவரா? அரசு அலுவலகத்தில் வேலை - முழு விவரம்
TNeGA Recruitment: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை காணலாம்.
![TNeGA Recruitment: பொறியியல் பட்டம் பெற்றவரா? அரசு அலுவலகத்தில் வேலை - முழு விவரம் Tamil Nadu e-Governance Agency e-District Manager in Kacheepuram Namakkal Nagapattinam Perambalur Trichirapalli Tiruppur Vellore Vilupuram TNeGA Recruitment: பொறியியல் பட்டம் பெற்றவரா? அரசு அலுவலகத்தில் வேலை - முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/5cc42d8273a63891e0fef13a0daccc5c1692789716510333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலிய உள்ள பணியிடத்திற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்
e-District Manager
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. ஐ.டி, சாஃப்வேர் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- SSLC/ HSC/ UG/ PG என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியர்களாகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பணியிட விவரம்
- நாமக்கல்
- நாகப்பட்டினம்
- பெரம்பலூர்
- திருச்சிராப்பள்ளி
- திருப்பூர்
- வேலூர்
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு கம்யூட்டர் தேர்வு நடத்தப்படும். 90 நிமிடங்கள் நடைபெறும் தகுதித் தேர்வில் 100 MCQ கேள்விகள் கேட்கப்படும். நெகட்டிவ் மார்க் முறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
ஆங்கிலம். கம்யூட்டர், C, C++., JAVA, நெட்வோர்க்கிங், இண்டர்நெட் டெக்னாலஜிஸ், ஹார்ட்வேர், டேட்டாபேஸ் மேனேஸ்மெண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.250 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள் - 24.09.2023
விண்ணப்பிப்பது எப்படி?
https://tnega.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.09.2023 - 6 மணி வரை
விண்ணப்பிக்க https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://tnega-edm.onlineregistrationform.org/TEG/instructions2.jsp - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Chandrayaan 3 Landing LIVE: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்.. உடனடி அப்டேட்ஸ் இங்கே...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)