Chandrayaan 3 Landing LIVE: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்...இஸ்ரோவின் அடுத்த அதிரடி!
Chandrayaan 3 Landing LIVE Updates: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் இங்கே காணலாம்.
LIVE
Background
இஸ்ரோ அறிவிப்பு:
சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “சந்திரயான் 3 ரோவர், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது, நிலவிற்காகவே உருவாக்கப்பட்டது சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து இறங்கி, நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்த தொடங்கியது. கூடுதல் விவரங்கள் விரைவில்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தரையிறங்கிய சந்திரயான் -3
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யான் ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யான் ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
கண்காணிப்பு:
இந்த சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.
அடுத்து வரும் 14 நாட்களில் நிலவில் கண்டுபிடிக்கப்படும் முக்கிய அம்சங்களை லேண்டர் படம்பிடித்து இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளது. உலகிலே நிலவின் தென் துருவத்தில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இந்தியாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Chandrayaan 3 Landing LIVE: நிலவின் பள்ளம், மேடுகளை துல்லியமாக படம்பிடித்த லேண்டர்
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய போது எடுத்த நிலவின் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பின் காட்சிகள் இஸ்ரோ வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்றுள்ளன. நிலவின் பள்ளம், மேடுகள் உள்ளிட்டவை புதிய வீடியோவில் துல்லியமாக இடம் பெற்றுள்ளன. விக்ரம் லேண்டரில் உள்ள மேரா எடுத்து அனுப்பிய படங்களை பகிர்ந்துள்ளது இஸ்ரோ.
Here is how the Lander Imager Camera captured the moon's image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro) August 24, 2023
Chandrayaan 3 Landing LIVE: ஆய்வை தொடங்கிய ரோவர்
நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வெற்றிகரமாக ரோவர் பிரிந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் அறிவியல் ஆய்வுப் பணிகள் தொடங்கின.
Chandrayaan 3 Landing LIVE: பிரக்யான் ரோவரில் இரண்டு கருவிகள் - இஸ்ரோ தலைவர்
பிரக்யான் ரோவரில் இரண்டு கருவிகள் உள்ளன. இந்த இரண்டு கருவிகளும் வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
#WATCH | ISRO chief S Somanath says, "Pragyan Rover has two instruments both are related to elemental composition findings on the moon as well as chemical compositions...Moreover, it will do the roving over the surface. We will also do a robotic path planning exercise which is… pic.twitter.com/MhnuuuUXB7
— ANI (@ANI) August 24, 2023
Chandrayaan 3 Landing LIVE: ”கனவு நனவாகியது" - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
சந்திரான் 3 வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவது எனது நீண்ட நாள் கனவு. தற்போது அது நனவாகியது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
#WATCH | On the successful Chandrayaan-3 landing, former ISRO chairman K Sivan says, "I compared the Chandrayaan-2 landing day and yesterday. So, definitely, my dream of going to the Moon and landing near South Pole came true yesterday. So, I am extremely happy that yesterday… pic.twitter.com/zXT5Dloa4O
— ANI (@ANI) August 24, 2023
Chandrayaan 3 Landing LIVE: தென் துருவத்தை தேர்தெடுத்தது ஏன்? - இஸ்ரோ தலைவர் விளக்கம்
சந்திரயான்-3 தரையிறங்கும் தளமாக தென் துருவத்தை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணங்களை இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கியுள்ளார். தென் துருவம் அதிக அறிவியல் உள்ளடக்கம் இருக்க வாய்ப்புள்ளது. தென் துருவத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் என்றார் இஸ்ரோ தலைவர்.
#WATCH | ISRO chief S Somanath on why ISRO chose the South Pole of the moon for Chandrayaan-3's landing; says, "We have gone closer to the South Pole which is 70 degrees almost. The South Pole has a specific advantage with respect to being less illuminated by the sun. There is a… pic.twitter.com/hpEV2MMcav
— ANI (@ANI) August 24, 2023