மேலும் அறிய

Chengalpattu Jobs: செங்கல்பட்டில் 20000 பேருக்கு வேலைவாய்ப்பு..! கவலையை விடுங்க.. செய்ய வேண்டியது என்ன? 

Chengalpattu Job Fair 2025: செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 காலி பணியிடங்களில் நிரப்பும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Chengalpattu Job Vaccancy: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு முகாம் Chengalpattu Job Fair 2025

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து, 22.03.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், படூர், கேளம்பாக்கம் (OMR) பகுதியிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.03.2025 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  

20,000 காலி பணியிடங்கள்

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 20000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். 

அனுமதி முற்றிலும் இலவசம்

மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் PM Internship திட்டத்தின் வாயிலாக Internship பயிற்சிக்கு விருப்பம் தெரிவிக்கும் வேலைநாடுநர்களுக்கு மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். 

யார் யார் கலந்து கொள்ளலாம் ?

மேலும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு என்ன ?

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 22.03.2025 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 3.00 மணி வரை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். சில நிறுவனங்கள் வயது வரம்பில் தளர்வு செய்து வேலைவாய்ப்பினை அளிக்கவும் உள்ளன.

தொடர்பு கொள்வது எப்படி?

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

மேலும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9486870577 /6383460933 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
Citroen C3X Coupe: திடீரென C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன் - கூடுதலாக 15 அம்சங்கள், விலைக்கே கூட்டம் குவியுமே..
Citroen C3X Coupe: திடீரென C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன் - கூடுதலாக 15 அம்சங்கள், விலைக்கே கூட்டம் குவியுமே..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
Citroen C3X Coupe: திடீரென C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன் - கூடுதலாக 15 அம்சங்கள், விலைக்கே கூட்டம் குவியுமே..
Citroen C3X Coupe: திடீரென C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன் - கூடுதலாக 15 அம்சங்கள், விலைக்கே கூட்டம் குவியுமே..
108 Ambulance Strike: மக்களே.. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு - என்ன காரணங்க?
108 Ambulance Strike: மக்களே.. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு - என்ன காரணங்க?
Rajinikanth: தில் இருந்தா டோப்பா இல்லாமல் நடிங்க ரஜினி? சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை சவால்!
Rajinikanth: தில் இருந்தா டோப்பா இல்லாமல் நடிங்க ரஜினி? சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை சவால்!
Rahul Gandhi: “48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
“48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 13.08.2025 மின்தடை; இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 13.08.2025 மின்தடை; இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Embed widget