Ziba Sherin : 'எதிர் நீச்சல்' ஃபர்ஹானாவுக்கு இத்தனை மவுசா? அமெரிக்காவில் ஒளிபரப்பான வீடியோ... ஜீபா ஷெரின் நெகிழ்ச்சி
எதிர் நீச்சல் சீரியலில் ஃபர்ஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீபா ஷெரின் வீடியோ ஒன்று அமெரிக்காவின் முக்கியமான வீதியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
![Ziba Sherin : 'எதிர் நீச்சல்' ஃபர்ஹானாவுக்கு இத்தனை மவுசா? அமெரிக்காவில் ஒளிபரப்பான வீடியோ... ஜீபா ஷெரின் நெகிழ்ச்சி Ethir neechal fame Ziba Sherin video was telecasted in American street Ziba Sherin : 'எதிர் நீச்சல்' ஃபர்ஹானாவுக்கு இத்தனை மவுசா? அமெரிக்காவில் ஒளிபரப்பான வீடியோ... ஜீபா ஷெரின் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/93b7d42fe48001b58742d4a4f034b5681691662728278224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக தொடர்ச்சியாக டி.ஆர்.பி ரேட்டிங்கின் வரிசையில் முன்னிலை வகித்து வருகிறது. ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் என அனைவருமே படித்த பட்டதாரி பெண்களை திருமணம் செய்து கொண்டு வீட்டில் அடிமைகளாக நடப்படுவதை எவ்வாறு அவர்கள் எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வருகிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலை இயக்கியுள்ளார் 'கோலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் திருச்செல்வம்.
பரபரப்பான சீரியல் :
சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் பல அதிரடி திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸுடன் ஒளிபரப்படுவது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் கொண்டாட வைத்துள்ளது.
எதிர் நீச்சலில் ஜீபா ஷெரின் :
எதிர் நீச்சல் தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் திருச்செல்வத்தின் தனிச் செயலாளராக நடித்து வரும் முஸ்லிம் பெண் பெயர் ஜீபா ஷெரின். ஃபர்ஹானா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து வரும் ஜீபா ஷெரின் சீரியலிலும் முஸ்லிம் பெண்ணாகவே நடித்து வருகிறார். ஒரு முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்து இந்திய தொலைக்காட்சி சீரியலில் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.
நெகிழ்ச்சி போஸ்ட் :
இந்த பெருமைக்குரிய விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் ஜீபா ஷெரின். "ஒரு முஸ்லிம் நடிகை ஹிஜாப் அணிந்து இந்திய சீரியலில் நடித்தது நான்தான்" என பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் வீடியோ ஒன்று அமெரிக்காவின் முக்கிய வீதியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து "இத்தனை அன்பை நான் உலகத்திடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை" என தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ஃபர்ஹானாவின் துணிச்சலான கதாபாத்திரம் பல பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளது. அவரின் வீடியோ அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)