மேலும் அறிய

Spark LIFE Teaser: விக்ராந்த் நடித்துள்ள 'ஸ்பார்க் லைஃப்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு எப்போது தெரியுமா?

Spark LIFE Teaser: விக்ராந்த் - மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள 'ஸ்பார்க் லைஃப்' எனும் திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று வெளியாகிறது.

விக்ராந்த் - மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள 'ஸ்பார்க் லைஃப்' எனும் திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட்-2  தேதியன்று வெளியாகும் என சுவாரசியமான போஸ்டருடன்  அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்பார்க் லைஃப்' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை பற்றிய ஒரு அப்டேட்டை சுவராசியமான போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கையில் முகமூடியுடன் அர்த்தமுள்ள அவதாரத்தில் விக்ராந்த் காணப்படுகிறார். அழுத்தமான கருப்பு வண்ண பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இந்த திரைப்பட கதை பற்றிய அப்டேட்கள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இதன் டீசருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இதில் மெஹ்ரீன் பிர்ஸாதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற F-3 எனும் படத்தில் தனது வசீகரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான இந்த படத்தின் மூலம் விக்ராந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறது. 'ஹிருதயம்' புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்த தனித்துவம் மிக்க த்ரில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படைப்புகள், உயர்தரத்துடன் சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படைப்பாளிகள்- தரத்திலோ... உள்ளடக்கத்திலோ... எந்த சமரசமும் இல்லாமல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மேலும் வாசிக்க..

Fahadh Faasil Mamannan: சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!

கலைஞனை கொண்டாடுவது சரி.. முட்டாள் கதாப்பாத்திரத்தை எதற்கு? : பொறுப்பை மறந்த மீம் கிரியேட்டர்ஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget