மேலும் அறிய

நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு

திருநேல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் சாமானிய மக்கள் மீது அடையாளம் தெரியாத 9 நபர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து  திரைப்பட இயக்குநர் மார் செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு அவர் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் . கடந்த ஆண்டு பள்ளி மாணவர் சின்னதுரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதேபோல் தலித சமூகத்தைச் சேர்ந்த கவின் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்பவரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியளவில் பேசுபொருளானது.  தற்போது  நெல்லை மாவட்டம்  நாங்குநேரியில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்த கிராமமும் தலித் குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு சார்பாக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் கண்டனம் 

தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் "நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

நாங்குநேரியில் இருவர் கொலை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் நேற்று இரவு 9 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். இந்த கும்பல்  அந்த வழியில் பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அவர்களை அரிவாளால் வெட்டி அவர்களின் வாகனத்தை பறித்து சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த கும்பல் பெரும்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு டீக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்கள். அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை விரட்டியபடி வெட்டினார்கள். இதில் ஒரு வட மாநில புலம்பெயர் தொழிலாளர் ஒருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

6 பேர் கைது 

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. 8 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக அரசு மீது பல்வேறு அரசியல் அட்சிக் கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget