Osaka Tamil Film Festival: ஒசாகா தமிழ் திரைப்பட விழா: விருதுகளை வாரிக் குவித்த சூரரைப் போற்று!
ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை வாரிக்குவித்துள்ளது.
ஜப்பானில் விருதுகளை குவித்த சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படக்குழு:
ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் விருதுகளை குவித்துள்ளனர், சூரரைப் போற்று திரைப்படக் குழுவினர். கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியானது சூரரைப் போற்று திரைப்படம். அத்திரைப்படத்தில் அபர்ணா, பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஒசாகா திரைப்பட விழா:
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் சூர்யா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் விருது பெற்றுள்ளனர்.
Also Read: KGF Chapter 2: ஓடிடியில் வெளியானது கேஜிஎஃப் 2.. ஆனால் ஒரு சின்ன மாற்றம்.. இதுதான் தகவல்!
விருதுகளை குவித்த சூரரைப் போற்று திரைப்படக்குழுவினர்:
ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை குவித்துள்ளது சூரரைப் போற்று திரைப்படம். சிறந்த நடிகராக சூர்யாவுக்கும், சிறந்த இயக்குநராக சுதா கொங்கராவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷீக்கும்,சிறந்த கலை இயக்குநர் விருது ஜாக்கிக்கும் மற்றும் சிறந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஒசாகாவின் ஆறு விருதுகளை சூரரைப் போற்று திரைப்பட குழுவினர் பெற்றிருப்பது, சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#OTIFF2020 Best Actor award Proudly presented to @Suriya_offl for #SooraraiPottru 🎉@osaka_tamil pic.twitter.com/HpdfQBm5aI
— Osaka Tamil International Film Festival (@osaka_tamil) May 16, 2022
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது:
ஒசாகாவின் சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருமாண்டி இயக்கத்தில் வெளியான க/ பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் நடித்தமைக்காக ஐஸ்வர்யா ராஜேசுக்கு இவ்வவிருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்