KGF Chapter 2: ஓடிடியில் வெளியானது கேஜிஎஃப் 2.. ஆனால் ஒரு சின்ன மாற்றம்.. இதுதான் தகவல்!
திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் கேஜிஎப்2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் மூன்றாம் பாகத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தகவல் கூறியுள்ளார்.
யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜனங்களைக் கவர்ந்துள்ளது. மேலும் ராக்கி பாய் என்ற கோபமான இளைஞன் அவதாரத்தில் யஷை ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த படத்தின் மூலம் ஒரு இந்திய நட்சத்திரமாக யஷின் புகழ் அதிகரித்துள்ளது. இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டு படங்களிலும் பணிபுரிந்ததற்காக பாராட்டப்பட்டார். படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் படத்தின் மூன்றாம் பாகத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் மூன்றாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் கேஜிஎப்2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் ஒரு சிறிய ட்விஸ்டுடன் வெளியாகியுள்ளது. நீங்கள் அமேசான் மெம்பராக இருந்தாலும் கேஜிஎப் படத்தைப் பார்க்க முடியாது. ரூ199 பணம் செலுத்தியே தற்போது பார்க்க முடியும். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையை அமேசான் கொண்டுவந்துள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றதும் வழக்கம்போல் ஓடிடியில் கட்டணமின்றி வெளியாகும் எனத் தெரிகிறது.
thrill ×2 | craziness ×2 | K.G.F ×2 💥#EarlyAccessOnPrime, rent now pic.twitter.com/FDtYdtro0l
— amazon prime video IN (@PrimeVideoIN) May 16, 2022
மிரட்டிய கே.ஜி.எஃப்
கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது
இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு செய்த நிலையில், வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்