மேலும் அறிய

45 ஆண்டு கால இசைஞானி இளையராஜா பயணத்தில்: 90 கிட்ஸ் ஃபேவரைட்10 பாடல்கள்

90 கிட்ஸ் அதிகம் ஏஆர் ரஹ்மான் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தார்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் 90 கிட்ஸ்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்னவென்றால் அவர்கள் ரஹ்மான் மற்றும் ராஜா என இருவரையும் கொண்டாடும் வாய்ப்பு பெற்றவர்களாக அமைந்தார்கள்.

'ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லை' என்ற பாடலை இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. அவருடைய திறமைக்கு ஏற்ப இந்தப் பாடலும் வரியும் அவருக்கு எவ்வளவு பொருத்தம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுபோன்று அமைந்தது தான் மற்றொரு பாடல் வரி, "நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா". இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப 45 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் திரை இசை உலகில் கால் பதித்தாலும் அவருடைய இசை காலம் கடந்து அழியாத ஒன்றாக அமைந்துள்ளது. 

90 கிட்ஸ் பெரும்பாலும் ஏஆர் ரஹ்மான் பாடல்களை கேட்டு தான் வளர்ந்திருப்பார்கள் என்ற கருத்து உண்டு. ஏனென்றால் 1992ஆம் ஆண்டு ரஹ்மான் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவர் திரைத்துறையில் வளர்ந்த காலத்தில் 90 கிட்ஸூம் வளர்ந்ததால் அவர்கள் அதிகம் ஏஆர் ரஹ்மான் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தார்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் 90 கிட்ஸ்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்னவென்றால் அவர்கள் ரஹ்மான் மற்றும் ராஜா என இருவரையும் கொண்டாடும் வாய்ப்பு பெற்றவர்களாக அமைந்தார்கள். குறிப்பாக 80களில் இளையராஜா தமிழ் திரை இசையை தனி மனிதராக தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். 1985-1990 வரை வந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அப்போது 1992ஆம் ஆண்டு வந்து ஏஆர் ரஹ்மானும் தனது பங்கிற்கு திரை இசையை வேறு தளத்திற்கு எடுத்து சென்றார். 

ஆகவே தமிழ் திரை இசையில் இந்த இரண்டு பேரையும் ஒன்றாக கேட்கும் பாக்கியம் 90 கிட்ஸ்களுக்கே ஒரு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் 90 கிட்ஸ்கள் அதிகம் பேர்  ரசித்த 10 இளையராஜா  பாடல்கள் என்னென்ன?

1. தென்றல் வந்து தீண்டும் போது:

1995ஆம் ஆண்டு வெளியான அவதாரம் படத்தில் இடம்பெற்ற பாடல் தென்றல் வந்து தீண்டும் போது. இதை இளையராஜாவும் ஜானகியும் பாடியுள்ளனர். இப்பாடலில் வரும் வரிகள் மிகவும் அழகாக இருக்கும். குறிப்பாக, " எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது.." என்ற வரிகள் பலரை இப்பாடலுக்கு கட்டுப்போட்டது.

 

2. மன்றம் வந்த தென்றலுக்கு:

1986ஆம் ஆண்டு வெளிவந்த 'மௌன ராகம்' படத்தில் இடம்பெற்ற பாடல் மன்றம் வந்த தென்றலுக்கு... இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். இந்தப் பாடலில் பிண்ணனியில் வரும் இசை கேட்போரின் காதுகளுக்கு ஒரு பெரிய ஆனந்தத்தை தரும். அத்துடன் எஸ்பிபியின் குரல் கேட்கும் போது இன்பதை தரும் வகையில் இருக்கும். 

 

3.வளையோசை கலகலவென:

1988ஆம் ஆண்டு வெளிவந்த சத்யா திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலில் எஸ்பிபி மற்றும் லதா மங்கேஷ்கர் சிறப்பாக பாடியிருப்பார்கள். இப்பாட்டு தொடங்குவதற்கு முன்பாக வரும் பிண்ணனி இசை பல முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த புள்ளாங்குழல் சத்தம் மீண்டும் மீண்டும் ஒளிக்கும் வகையில் இருக்கும். 

 

4.  என்ன சத்தம் இந்த நேரம்:

1986ஆம் ஆண்டு வெளிவந்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் பிண்ணனி இசை இளையராஜாவை இசைக்கு ஏன் அரசன் என்று சொல்கிறோம் என்பதற்கு சான்றாக அமைந்தது. இந்தப் படத்தில் அமைந்த 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடல் பலரை கவர்ந்தது. குறிப்பாக எஸ்பிபி கமல்ஹாசன் மற்றும் இளையராஜா கூட்டணி பலரை கட்டிப்போட்டு வைக்கும் வகையில் இருக்கும். அந்த கூட்டணியில் அமைந்த ஒரு பாடல் இது. 

 

5. கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே:

1989ஆம் ஆண்டு வெளிவந்த புதுபுது அர்த்தங்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எஸ்பிபி பாடியிருப்பார். படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் பல ஆண்டுகள் கல்யாண வீடுகளில் ஒழித்து கொண்டே இருக்கும் பாடலாக அமைந்தது. இதை படத்தில் காட்சி படுத்தும் போது நடிகர் ரஹ்மான் சிறப்பாக நடித்திருப்பார். ஒரு வரியில் தன்னை மெய் மறந்து இருப்பது போல இந்தப் பாடலில் இருப்பார். அந்த அளவிற்கு இந்தப் பாடல் மற்றும் அதன் வரிகள் இசையுடன் பின்னி இருக்கும். 

 

6. மண்ணில் இந்த காதல் அன்றி:

1990ஆம் ஆண்டு இயக்குநர் வசந்த் திரைப்படம் 'கேளடி கண்மணி'. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய மண்ணி இந்த காதல் அன்றி வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றது. இந்தப் பாடலை எஸ்பிபி அளவிற்கு வேறு எவரும் பாட முடியாது என்பதை அவர் நிரூபித்திருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலாக இது அமைந்தது. 

 

7.சின்ன தாய் அவள்:

1991ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'தளபதி'. நட்பிற்கு இலக்கணமாக கருதப்படும் இப்படத்தில் அம்மாவிற்காக வரும் பாடல் அனைவரையும் கண்கலங்க வைக்கும். அந்த அளவிற்கு உணர்ச்சியை தனது இசை மூலம் இளையராஜா வெளி கொண்டு வந்திருப்பார். 

 

8. நீ எங்கே:

1991ஆம் ஆண்டு வெளிவந்த சின்னதம்பி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடலகளும் சிறப்பாக இருக்கும். அதில் குறிப்பாக நீ எங்கே எந்த பாடல் சுவர்ணலதாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் அமைந்திருக்கும். சுவர்ணலதாவின் குரலில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. 

 

9. தென்பாண்டி சீமையிலே:

1987ஆம் ஆண்டு வெளிவந்த 'நாயகன்' படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இளையராஜா மற்றும் கமல்ஹாசன் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். இதில் பிண்ணனியில் வரும் இசை மற்றும் இளையாராஜா பாடலை ஆரம்பிக்கும் விதம் என இரண்டும் சிறப்பானதாக அமைந்திருக்கும். 

 

10.  என்னை தாலாட்ட வருவாலா:

1997ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சிறப்பான படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் வரும் என்னை தாலாட்ட வருவாலா பாடல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மிகவும் முக்கியமானது என்பது இது போன்ற பாடல்களால் உணர்த்தப்பட்டிருக்கும். 

 

இன்னும் இருக்கு... ராஜாவின் ராஜ்யத்தை பட்டியலிட பக்கங்கள் போதாது என்பதால் இத்தோடு முடிக்கிறோம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.