DSP Viral Post: மொக்க படத்துக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா.. விஜய்சேதுபதியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
நேற்று திரையாங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக சொதப்பிய டிஎஸ்பி படக்குழுவினரின் லேட்டஸ்ட் போஸ்ட் ஒன்று தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களை தொடந்து இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎஸ்பி’. இமான் இசைமைத்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக அனு கீர்த்தியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் சர்ப்ரைஸாக பசங்க,களவாணி, வாகை சூடவா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகர் விமல் டிஎஸ்பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஏமாற்றத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள் :
நேற்று திரையரங்குகளில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியுள்ளது என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக ஆக்சன் படங்களின் இருக்கும் கதை தான் இப்படத்திலும் கையாளப்பட்டது. போலீஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, எப்படி வில்லனை கொல்கிறார் எனும் வாடிக்கையான கதை மட்டுமே. மற்றபடி காமெடி, செண்டிமெண்ட் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாமல் தொடக்கம் முதல் இறுதி வரை சலிப்பை மட்டுமே தட்டிய இப்படத்தை காசு கொடுத்து திரையரங்கில் சென்று பார்த்த ரசிகர்கள் மொக்கை தான் வாங்கினார்கள் என கமெண்டுகள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டன.
🔥💥Actor @VijaySethuOffl and Director @ponramVVS celebrated the victory of #DSP 🚓🚨.
— Ramesh Bala (@rameshlaus) December 3, 2022
Festival atmosphere in theatres 🎉🌟 #DSPRunningSuccessfully @stonebenchers @karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar @anukreethy_vas @onlynikil pic.twitter.com/RoCpsUrG4g
வெட்டி கொண்டாடிய டிஎஸ்பி படக்குழு :
ஒரே நாளில் படம் இப்படி சொதப்பிய நிலையில் டிஎஸ்பி படக்குழுவினர் இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக பகிரப்பட்டு வைரலாக வருகிறது. படத்தில் எந்த ஒரு மெசேஜூம் இல்லலாமல் அரைத்த மாவையே மீண்டும் அரைத்து விட்டு இப்படி கொண்டாடி வருகிறார்களே என கடிந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். விஜய் சேதுபதியின் வழக்கமான மிரட்டலான நடிப்பு பாராட்டப்பட்டாலும் இயக்குனர் பொன்ராம் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம் என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.
10 varusam kalichu intha photo va pakaravan ena nenaipan :
— Pradeep Kumarᶜᴵᴺᴱᴹᴬ ᴸᴼⱽᴱᴿ (@iamPKoffl) December 3, 2022
Nejamave intha padam BlockBuster nu thana nenaipan : 😮😂#DSP #VijaySethupathi pic.twitter.com/slMiN1sQ8K
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான டிஎஸ்பி திரைப்படத்தில் சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை என்பது தான் ரசிகர்களின் ஒரே வரி விமர்சனமாக இருந்தது.