Anurag Kashyap: இந்தி சினிமாவின் கேம் சேஞ்சர்.. “அனிமல்” பட இயக்குநரை பாராட்டித் தள்ளிய அனுராக் கஷ்யப்!
அனிமல் பட இயக்குநரை பாராட்டி அவருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார் இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப்!
“அனிமல்” பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப்.
அனிமல்
அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இரண்டாவது படமாக கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.
ஆணாதிக்கம், பெண் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அனிமல் படத்தின் காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களிலும் மற்றும் திரைப்பட விமர்சகர்களும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்தனர். ஒரு பக்கம் படம் 900 கோடி வசூல் செய்து வர மறுபக்கம் படத்தின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தபடியே இருந்தன.
கிரிக்கெட் வீரர் உனட்கட், பாடலாசிரியர் ஜாவித் அக்தர், ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனு உள்ளிட்டவர்களின் விமர்சனங்கள் கவனம் பெற்றது. இப்படியான நிலையில் இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு நீண்ட பதிவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
தவறாக புரிந்துகொள்ளப் பட்ட இயக்குநர்
View this post on Instagram
அவரது பதிவில் ”சந்தீப் ரெட்டி வங்காவுடன் இந்த மாலை இனிமையாக கழிந்தது. சமீப காலத்தில் அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட, அதிகம் வசைபாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர். என்னைப் பொறுத்தவரையில் அவர் மிகவும் நேர்மையான, தனது பலவீனங்களை வெளிப்படுத்தும் ஒரு அமைதியான மனிதர் அவர். அவரைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் யார் என்ன நினைத்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
நான் அவரை சந்தித்து எனக்கு இருந்த சில கேள்விகளை கேட்டேன். அதற்கு எல்லாம் அவர் பொறுமையாக இருந்து எனக்கு பதில் சொன்னார். அனிமல் படத்தை நான் இதுவரை இரண்டு முறை பார்த்திருக்கிறேன், முதல் முறை பார்த்து 40 நாட்கள் ஆகின்றன. இரண்டாவது முறை பார்த்து 22 நாட்கள் ஆகின்றன. பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு கேம் சேஞ்சர் இந்தப் படம். மேலும் ஒரு சமூகத்தில் நல்லதோ, கெட்டதோ அது ஏற்படுத்தும் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவை. அதை எல்லாம் ஒரே ஆளாக தனது தோள்களில் சுமக்கும் ஒரு இயக்குநர்.’ என்று அனுராக் கஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!