Demonte Colony 2 : கோப்ரா படம் தோல்வி.. சொல்லி அடித்த இயக்குநர்.. டிமாண்டி காலனி வசூல் என்ன தெரியுமா?
அருள்நிதி நடித்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமாண்டி காலனி 2 படம் இந்தியளவில் ரூ.25 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டிமாண்டி காலனி 2
2015-ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி தமிழில் வெளியான வித்தியாசமான ஹாரர் படங்களில் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அறிவிப்பு வெளியாகி பின் நீண்ட நாட்கள் ரிலீஸ் காத்திருப்பில் இருந்தது.
இதனிடையில் இப்படத்தின் அஜய் ஞானமுத்து விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கினார். இந்த படம் பெரியளவில் தோல்வியை தழுவியது. இந்த படத்தை இயக்குவதில் தனக்கு விருப்பமே இல்லை என்றும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலால்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி டிமாண்டி காலனி 2 ஆம் பாகம் திரையரங்குகளில் வெளியாமது. இதே நாளில் விக்ரம் நடித்த தங்கலான் படமும் வெளியாகியது.
தங்கலான் படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும் துணிந்து இப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
துணிச்சலுக்கு பரிசாக டிமாண்டி காலனி படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. முதல் பாகம் அளித்த அதே ஹாரர் ஃபீலை இந்த படத்திலும் தக்கவைத்துள்ளார்கள். மேலும் இப்படத்தின் வெற்றி நடிகை பிரியா பவானி சங்கருக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. முன்னதாக அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் ராசியில்லாத நடிகை என அவர் முத்திரை குத்தப்பட்டார். இப்படத்தின் வெற்றி அந்த அடையாளத்தை நீக்கியுள்ளது.
டிமாண்டி காலணி 2 வசூல்
#DemonteColony2 - Crossed 25cr Mark in TN Box Office..✅ Biggest Blockbuster in #Arulnithi's Career & huge comeback by Director #AjayGnanamthu ..🤝
— Laxmi Kanth (@iammoviebuff007) August 25, 2024
Second Weekend Booking also looks Solid..⭐ pic.twitter.com/AFfnuVJnHj
பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் டீமாண்டி காலணி 2 படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிட்டுள்ளது. முதல் 4 நாட்களில் படம் 21 கோடி வசூலித்திருந்ததாக இத்தளத்தில் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இப்படம் இதுவரை 25 கோடி வரை இந்தியளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் இயக்குநர் , நடிகை பிரியா பவாணி சங்கர் ஆகிய இருவருக்கும் மட்டும் இப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. படத்தின் நாயகன் அருள்நிதி நடித்ததிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக இப்படம் முதலிடம் பிடித்துள்ளது.