April Month Release : சுந்தர்.சியின் அரண்மனை 4 முதல் விஜய் ஆண்டனியின் ரோமியோ வரை...ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்கள்
ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் முக்கியமான படங்களைப் பார்க்கலாம்
சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 முதல் ஃபகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள ஆவேஷம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன.
ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் படங்கள்
2024 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் வெளியான மூன்று படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படியான நிலையில் அடுத்த மாதம் தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியாக இருக்கும் முக்கியமான படங்களைப் பார்க்கலாம்.
அரண்மனை 4 (Aranmanai 4)
சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாக ரசிகர்களிடையே கொண்டாடப் பட்ட அரண்மனை படத்தின் 4 ஆவது பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. தமன்னா , ராஷி கன்னா , சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு , கோவை சரளா, யோகி பாபு, VTV கணேஷ், டெல்லி கணேஷ் , ராஜேந்திரன் , சிங்கம்புலி , தேவா நந்தா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.
ரோமியோ (Romeo)
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிர்ணாலினி , யோகி பாபு, விடிவி கனேஷ் நடித்துள்ள படம் ரோமியோ. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது.
கள்வன் (Kalvan)
அறிமுக இயக்குநர் பி.வி சங்கர் இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் கள்வன். ஜி.வி.பிரகாஷ் , இவானா, பாரதிராஜா, தீனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
ரத்னம் (Rathnam)
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம் , கிருஷ்ணா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, கெளதம் மேனன் , யோகிபாபு இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சு பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகும்
ஆவேஷம் (AAVESHAM)
மலையாளத்தில் தற்போது 'ஆவேஷம்' படத்தில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். கடந்த ஆண்டு ரொமான்ச்சம் படத்தை இயக்கிய ஜீது மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கும்பலங்கி நைட்ஸ் , மாலிக் , மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அன்வர் ரஷீத் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
மைதான் (Maidaan)
பதாய் ஹோ படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட இயக்குநர் அமித் ஷர்மா. தற்போது அவர் இயக்கியுள்ள படம் மைதான் . இப்படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியாமணி மற்றும் பலர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
படே மியான் சோட்டே மியான் (Bade Miyan Chote Miyan)
அலி அபாஸ் ஜாஃபர் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் படம் படே மியா சோட்டே மியா. அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் இணைந்து இப்படத்தில் கலக்க இருக்கிறார்கள். பிருத்விராஜ் , மனுஷி சில்லர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
வருஷங்கள்க்கு சேஷம்
மலையாளத்தில் ஹ்ரிதயம் , தட்டத்தின் மரயத்து உள்ளிட்டப் படங்களை இயக்கிய வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வருஷங்கள்க்கு விசேஷம் .பிரணவ் மோகன்லால், தியான் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி, வினீத் ஸ்ரீனிவாசன், பாசில் ஜோசப், அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ், கல்யாணி பிரியதர்ஷன், நீதா பிள்ளை, அர்ஜுன் லால், நிகில் நாயர், ஷான் ரஹ்மான் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.