ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை செம்ம விலைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா..!
ஆண்டனி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜோஷி இயக்கிய 'ஆண்டனி' படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.
ஆண்டனி திரைப்படம்:
பொழுதுபோக்கு துறையில் முன்னணி பெயர் பெற்ற அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மும்பை, ஐன்ஸ்டின் மீடியாவுடன் ஒரு முக்கிய கூட்டணியில் இணைந்தது. இது தென்னிந்தியவில் அல்ட்ராவின் குறிப்பிடத்தக்க என்ட்ரியாக கருதப்படுகிறது. அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மலையாள திரையுலகில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.
ஐன்ஸ்டின் மீடியா தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆன்டனியின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இது மலையாள திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த புதிய கூட்டணி மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து சினிமா ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஐன்ஸ்டின் மீடியா இடையேயான இந்த புதிய கூட்டாண்மையானது உயர்தர மற்றும் கலாச்சார ரீதியாக வளமான சினிமாவை பல்வேறு ரசிகர்களுக்கு வழங்குவதற்கான உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
டிஜிட்டல் உரிமையை தட்டித்தூக்கிய அல்ட்ரா மீடியா நிறுவனம்:
இந்த புதிய கூட்டணி மூலம், அல்ட்ரா மீடியாவானது ஐன்ஸ்டின் மீடியா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு பரவலான இணைய அணுகலை உறுதியளிக்கிறது. ஒரு மெகா OTT இயங்குதளத்துடன் கூட்டுசேர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நிறுவனங்களும் இந்த கூட்டணியில் இருந்து வெளிப்படும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைப்புகள் குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றன.
அல்ட்ரா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சுஷில்குமார் அகர்வால், ஐன்ஸ்டின் மீடியாவுடனான கூட்டணி தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். “மலையாளம், தமிழ் மற்றும் தென்னிந்தியாவின் பிற பிராந்திய மொழிகளின் செழுமையான கலாச்சாரத்தை ஆராய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த புதிய கூட்டணி தேசிய அளவில் பார்வையாளர்களுடன் புதிய மற்றும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
“அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மும்பையுடன் இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டணி, ஆக்கப்பூர்வமான மொழி சார்ந்த படங்களை தருவதிலும் மற்றும் தென்னிந்திய ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை கொண்டு வருவதற்கும் எங்களின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
இருநிறுவனங்களும் ஒன்றாக இணைந்து பொழுதுபோக்கு உலகில் புதிய மாற்றத்தை கொண்டுவருவதற்கும், மறக்கமுடியாத சினிமா அனுபவங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று ஐன்ஸ்டின் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐன்ஸ்டின் சாக் பால் கூறினார்.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை. மேலும் பல ரகசிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி பொழுதுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லை முடியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழியியல் மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டிய அழுத்தமான கதைகளை வடிவமைக்க இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன. அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஐன்ஸ்டின் மீடியா ஆகியவை இணைந்து செயல்படுவதால், ரசிகர்களுக்கு புதுமையான, பன்முகத்தன்மை மற்றும் இணையற்ற புதிய தொடர்களுக்கு உறுதியளிக்கும் ஒரு புதிய பொழுதுபோக்கு சகாப்தத்தை எதிர்பார்க்கலாம்.