Chandrayaan 3 அமிதாப் பச்சன் முதல் மாதவன் வரை: சந்திரயான் - 3 நிலவு பயணத்துக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்..
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்க வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்துள்ளனர் செலிபிரிட்டிகள்.
![Chandrayaan 3 அமிதாப் பச்சன் முதல் மாதவன் வரை: சந்திரயான் - 3 நிலவு பயணத்துக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்.. Amitabh bachchan to parvathi South celebrities wishes Chandrayaan 3 mission to become successful Chandrayaan 3 அமிதாப் பச்சன் முதல் மாதவன் வரை: சந்திரயான் - 3 நிலவு பயணத்துக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/96da96654966420234cf12d1512f893d1692781323280224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகமே இன்றைய தினத்துக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ஆம் தேதியான இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த இரண்டாவது முயற்சி வெற்றி பெற வேண்டும் என உலகெங்கிலும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் சந்திரயான் -3 வெற்றி பெற வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
அமிதாப் பச்சன் :
நடிகர் அமிதாப் பச்சன் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் "நாளை மாலை நிலவு உதிக்கும் நேரம் நமது இந்தியாவின் கால்தடம் நிலவில் பதிந்து இருக்கும். நமது குழந்தை பருவத்தில் கேட்டு வளர்ந்த குட்டி கதைகள் அனைத்தும் நமது குழந்தைகள் எட்டும் இடத்தில் இருக்கும். இந்த சாதனை ஒவ்வொரு இந்தியா குடிமகனுக்கும் ஒரு மெசேஜ் சொல்கிறது. நமது நாடு திரும்ப துவங்கியுள்ளது. நாம் அதற்காக ஏதாவது செய்ய வேண்டும்" என்ற எண்ணத்தை விதைக்கிறது.
ரிஷப் ஷெட்டி:
காந்தார திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நிலவின் மேற்பரப்பின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து "இந்தியாவுக்கு நாளைய தினம் ஒரு மைல்கல்லை குறிக்கிறது. இந்த வரலாற்று நாளை காண மகிழ்ச்சியில் இருக்கிறேன். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்" என குறிப்பிட்டு இருந்தார்.
மாதவன்:
நடிகர் மாதவன், தனது சோசியல் மீடியா பக்கத்தில் சந்திரயான் - 3 குறித்த தனது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் விகாஸ் இன்ஜின்காக நம்பி நாராயணனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
லாவண்யா திரிபாதி :
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, இந்த பெருமையான தருணத்தில் இஸ்ரோவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
பார்வதி நாயர்:
நடிகை பார்வதி தனது பதிவில் "சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் இந்த நேரம் நமது நாட்டின் விண்வெளி ஆய்வில் மிக முக்கியமான தருணத்தை குறிப்பிடுகிறது. நமது நாட்டின் புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்பு, புத்தி கூர்மை மற்றும் அவர்களின் கடினமான உழைப்புக்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாகும். அவர்களின் இந்த அர்ப்பணிப்பை, உணர்வை கொண்டாடுவோம். இந்தியா முன்னோக்கி செல்கிறது. வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என்பதற்காகவும் நமது அறிவியல் பாரம்பரியத்தில் மற்றுமொரு பெருமையான அத்தியாயமாக அமையவும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)