Ajith Shalini Photo: உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.. வைரலாகும் அஜித் -ஷாலினி போட்டோ.. அது என்ன இடம் தெரியுமா?
தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
நடிகர் அஜித்குமார் மற்று ஷாலினி ஒன்றாக இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் கனவு தம்பதியாக பார்க்கப்படுபவர்கள் அஜித்- ஷாலினி. மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கும் இந்த தம்பதியின் புகைப்படங்கள் முன்னெல்லாம் எப்போதாவது சமூகவலைதளங்களில் தலை காட்டும். ஆனால் இப்போதெல்லாம் இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி உலா வருகின்றன. அண்மையில் கூட, தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
View this post on Instagram
அந்த வகையில் தற்போது அஜித், ஷாலினி ஒன்றாக இருக்கும் மற்றொரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பான்மையான ட்விட்டர்வாசிகள், அஜித் ஷாலினி நின்று கொண்டிருக்கும் பிரான்ஸ் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
அஜித்தும் ஷாலினியும் ’அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது காதலித்தனர். அந்தப்படத்தில் ஷாலினி தனது கையை கத்தியால் வெட்டிக்கொள்ளும் காட்சி ஒன்று வரும். ஆனால் அந்தக்காட்சி படமாக்கப்பட்ட போது, உண்மையாகவே ஷாலினி தனது கையை வெட்டிக்கொண்ட நிலையில், அதன் பிறகுதான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அஜித்தே ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து காதலித்த இருவரும், கடந்த 2000-ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
View this post on Instagram
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது.
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.