TN Mayor Election Result 2022 LIVE: கூட்டணிக்கு எதிராக தேர்வானவர்கள் பதவி விலக வேண்டும்.. குற்ற உணர்ச்சியால் , நான் குறுகி நிற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
TN Mayor Election Results 2022 LIVE Updates: மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டநிலையில், அதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது.
LIVE
Background
ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல், பல கட்டங்களாக முடிந்து, தமிழ்நாடு முழுக்க, ஊரக உள்ளாட்சி முதல், நகர் புற உள்ளாட்சி வரை மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பிவிட்டன. ஆண்டு கணக்கில் காலியாக இருந்த கவுன்சிலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாநகராட்சிகளில், கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது மேயர் மற்றும் துணை மேயர் போட்டிக்கான வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
10 மாநகராட்சிகளாக தேர்தலை சந்தித்த தமிழ்நாடு, நீண்ட... இடைவெளிக்குப் பின் அதிகரிக்கப்பட்டு 21 மாநகராட்சிகளாக தேர்தலை சந்தித்துள்ளது. 21 மேயர்கள் தமிழ்நாட்டில் ஓரிரு நாளில் பொறுப்பேற்க உள்ளனர். துணை மேயர்களும் அதே எண்ணிக்கையில் வருவார்கள்.
இந்தநிலையில், மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டநிலையில், அதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது.
நாகை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மறைமுக தேர்தலில் 2 நகராட்சியையும் 2 பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியது
நாகை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மறைமுக தேர்தலில் 2 நகராட்சியையும் 2 பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியது: தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுகவும், திட்டச்சேரி பேரூராட்சியை சுயேட்சை கைப்பற்றினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. நாகர்கோவில் மாநகர முதல் மேயராக திமுக வை சேர்ந்த மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மயிலாடி பேரூராட்சியில் உறுப்பினர் ஒருவர் வராததால் தேர்தல் ஒத்திவைப்பு.
கூட்டணிக்கு எதிராக தேர்வானவர்கள் பதவி விலகவேண்டும்.. நேரில் வந்து தன்னை சந்திக்கவேண்டும் - உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
தலைமையின் உத்தரவை மீறி தோழமைக்கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வென்ற தி.மு.க. போட்டி வேட்பாளர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சங்கரன்கோவில் நகராட்சி - தலைவர் திமுக, துணைத் தலைவர் அதிமுக
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றிய நிலையில் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இடைக்கழி நாடு பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..!
இடைக்கழி நாடு பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கணபதி வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மைக்கு வாக்களிக்க11 பேர் வர வேண்டிய சூழ்நிலையில், 10 பேர் மட்டும் வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது